தமிழகத்தில் படிக்கும் 1, 6, 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகங்கள் ரிலீஸ்!

தமிழகத்தில் படிக்கும் 1, 6, 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகங்கள் ரிலீஸ்!

எதிர்காலத்தில் நீட் உள்பட எத்தகைய தேர்வுகள் வந்தாலும் அதை எதிர் கொள்ளும் வகையில் தமிழகத்தில் படிக்கும் 1, 6, 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

தேசிய கலைத்திட்டம் 2005ம் ஆண்டில் வெளியிடப்பட்ட நிலையிலும், மாநிலத்தில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் 7 ஆண்டுகளுக்கு முன்பும், மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன்பும் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டு, புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய பாடநூல்களை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் அடிப்படையில், மாணவர்களின் முழுமையான ஆளுமை திறனை வளர்த்திடவும், செயல்வழி கற்றல் முறை மற்றும் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், சிந்தனைத் திறனை வெளிக்கொண்டு வரும் வகையிலான மதிப்பீட்டு முறையை உள்ளடக்கியும், உலகளாவிய அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான சவால்களை மாணவர்கள் உறுதியோடு எதிர்கொள்ளும் வகையிலும், மிகச் சிறந்த கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டு புதிய பாடத்திட்டமும், பாடநூல்களும் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் புதிய பாட திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்டுள்ள 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பாட நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “இந்த புதிய பாடப்புத்தகம் சிறந்த கட்டமைப்பு, தகுந்த படங்கள் மற்றும் பாடம் சார்ந்த தகவல்களை கொண்டுள்ளதோடு, மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்க ஏதுவாக தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வாய்ப்புள்ளது என்றும், இந்த புதிய பாடத்திட்டமும், பாடநூல்களும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தரும் என்றார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அனைத்து பாடங்கள் மற்றும் மொழிப் பாடங்களில் தயாரிக்கப்பட்டுள்ள 147 தலைப்புகளில் அமைந்துள்ள பாட நூல்களை முதல் வர் வெளியிட்டார். தேசியக் கலைத்திட்டம் 2005-ல் வெளியிடப்பட்டது. மாநிலத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையி லான பாடத்திட்டம் 7 ஆண்டுகளுக்கு முன்பும் மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன் பும் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலை யில் மாணவர்களின் கல்வி மேம்பாட் டைக் கருத்தில் கொண்டு புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய பாட நூல்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்தது.

அதன் அடிப்படையில் மாணவர்க ளின் முழுமையான ஆளுமை திறனை வளர்த்திடவும் செயல்வழிகற்றல்முறை படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும் சிந்தனைத் திறனை வெளிக்கொணரும் வகையிலான மதிப்பீட்டு முறையை உள்ளடக்கியும் உலகளாவிய அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான சவால்களை உறுதி யோடு எதிர்கொள்ளும் வகையிலும் புதிய பாடத்திட்டமும் பாடநூல்களும் உருவாக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடப் புத்தகங்களில் உள்ள முக்கிய அம்சங்கள்

புதிய பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

குறிப்பிட்ட பாடத்தில் உயர்கல்விக்கான வாய்ப்பு விவரங்கள்.

மாணவர்கள் பெற வேண்டிய செயலாக்கத் திறன் மற்றும் குறிப்பிட்ட திறனை விவரித்தல்.

அன்றாட வாழ்க்கை, துறைசார் வளர்ச்சியோடு பாடப் பொருளை தொடர்படுத்தும் கூடுதல் விவரங்கள்.

தெளிவான புரிதலுக்காக தீர்வுகளுடன் கூடிய மாதிரி கணக்குகள்.

கற்ற திறன்களை தாங்களே சுயமதிப்பீடு செய்ய உதவி.

கருத்துகள், காணொலிக் காட்சிகள், அசைவூட்டங்கள் மற்றும் தனிப்பயிற்சிகள் ஆகியவற்றை ‘கியூஆர் கோடு’ மூலம் அணுகும் வசதி.

கற்றலுக்கான வளங்களுக்கு வழிகாட்டல், மாணவர்கள் அவற்றை அணுகவும் கருத்துகள் மற்றும் தகவல்களை பரிமாறவும் வாய்ப்பளித்தல்.

பாடப் பொருள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரி.

சுருக்கிய வடிவில் பாடப்பகுதி கருத்து.

பாடப்பகுதியின் கருத்துகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்துவ தன் மூலம் பாடப் பொருளை உணரச் செய்தல்.

பன்முக தெரிவு வினா, எண்ணி யல் கணக்கீடுகள் ஆகியவை மூலம் மாணவர்களின் புரிதல் நிலை மதிப்பீடு.

தொடர் வாசித்தலுக்கு ஏற்ற குறிப்புதவி நூல்களின் பட்டியல்.

மாணவர்கள் தாங்கள் கண்டறிந்த விடைகளின் சரி தன்மையை உறுதி செய்யவும் கற்றல் இடைவெளியை சரிசெய்து கொள்ளவும் உதவி.

முக்கிய கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்.

அடிப்படை மாறிலிகள் மற்றும் முக்கிய தரவுகளின் அட்டவணை.

error: Content is protected !!