மேரேஜ் அலையன்ஸ் வெப்சைட்டுகளுக்கு ஆப்பு!

மேரேஜ் அலையன்ஸ் வெப்சைட்டுகளுக்கு ஆப்பு!

ஸ்மார்ட் போனும் கையுமாக வாழும் இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலும் இணையதளம் மூலமாக புதிய உறவுகளைத் தேடி வெட்கமில்லாமல், கூச்சமில்லாமல் பல அருவருக்கத்தக்க விஷயங்களையும், பொய்களையும் சொல்லி, நெருங்கி பழகி தங்களது அந்தரங்களைப் பகிர்ந்து கொண்டு நேரிலே பார்க்காமல், திருமணம் செய்து கொண்டு இணையதளத்திலேயே குடும்பம் நடத்துவதும்,சமையலறை, குளியலறை மற்றம் படுக்கையறை விஷயங்களை பகிர்ந்து கொள்வது, தனிக்குடித்தனம் நடத்துவது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

matri jun 3

இதன் பின், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இணையதளத்திலேயே விவாகரத்து பெற்று ‘விடோயர்’ என்ற அந்தஸ்தை பெறுகின்றனர். இப்போது இவை எல்லாம் சகஜமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதையடுத்து வெறொரு இணைய தளம் மூலம் வெறொரு வாழ்க்கைத் தேடிக் கொள்ளும் போக்கும் நடக்கிறது.இதை ஊக்கு விக்கும் விதமாக பல வெப்சைட்டுகள் இயங்கி வருகின்றன

இதையடுத்து திருமணத் தகவல் பரிமாற்றத்துக்கான இணையதளங்களை “டேட்டிங்’ போன்ற தவறான செயல்களுக்கு பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில், வகுப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இப்புதிய விதிமுறைகளின்படி, திருமண தகவல் பரிமாற்றத்துக்கான இணையதளங்களை அணுகுவோரின் உண்மையான நோக்கம், மணமகன் அல்லது மணமகளை தேடுவதுதானா? என்பதை இந்த இணையதளங்களின் நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். திருமணம் தொடர்பான தகவல்களைக் கோரி, இணையதளத்தில் தங்களைப் பற்றிய சுய விவரங்களைப் பதிவு செய்வோர், தங்களது அடையாளச் சான்று, இருப்பிடச் சான்று ஆகியவற்றின் நகல்களை அல்லது பதிவேற்றம் செய்யப்பட்ட இந்தச் சான்றுகளை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

திருமணத் தகவல் பரிமாற்றத்துக்கான இணையதளங்களை “டேட்டிங்’ போன்ற தவறான செயல்களுக்கு பயன்படுத்துவதையும், இந்த இணையதளங்களில் ஆபாசப் படங்கள் வெளியிடப்படுவதையும் தடுக்க இப்புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆக தற்போது , திருமணத் தகவல் பரிமாற்றத்துக்கான இணையதளங்களும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தொலைத்தொடர்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Posts

error: Content is protected !!