புதிய தேசிய கீதம் – பாகிஸ்தான் முடிவு!

புதிய தேசிய கீதம் – பாகிஸ்தான் முடிவு!

நமது இந்திய நாடு சுதந்திரம் வாங்கி (1947 ஆகஸ்ட் 15)க்கு முந்திய நாளே பாகிஸ்தானுக்கு அதா வது, 1947 ஆகஸ்ட் 14. சுதந்திரம் கிடைத்து விட்டது ஆனால், ஒரு செய்தி தெரியுமா…? சுதந்தி ரம் கிடைப்பதற்கு முன்பே, நமக்கு தேசிய கீதம் கிடைத்துவிட்டது. ஆனால், பாகிஸ்தானுக்கு அப்படி இல்லை. சுதந்திரத்துக்குப் பிறகு, ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் கழித்துதான் அவர்களுக்கு தேசிய கீதம் கிடைத்தது. அதிலும் பரிசு அறிவித்து, பல பாடல்களை ஆராய்ந்து பார்த்து, தேடித் தேடித் தேடித் தேர்ந்தெடுக்கப்பட்டது – பாகிஸ்தானின் தேசிய கீதம். ஆனால் தற்போது கலாச்சார வேறுபாடுகளை பிரதிபலிக்கும் வகையில் தனது நாட்டு தேசிய கீதத்தை மாற்றியமைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக உலகத்தரத்திலான ஆர்கெஸ்ட்ரா இசையுடன் புதிய தேசிய கீதத்தை இசைத்து பதிவு செய்யுமாறு, பாகிஸ்தான் தேசிய கலைக்கழகத்தை அரசு பணித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த முடிவு அந்நாட்டு தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் மரியம் ஔரங்கசீப் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் நாட்டின் 70ஆவது சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ஏற்பாடுகளைச் செய்யவும், அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ’குவாமி தரானா’ (Qaumi Taranah) மற்றும் பாக் சர்ஜாமின் (Pak Sarzamin) ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் பாகிஸ்தானின் தேசிய கீதத்தை கடந்த 1952ல் ஹஃபீஸ் ஜலந்தரி என்பவர் இயற்றினார். அந்நாட்டு தேசிய கீதத்துக்கு அகமது ஜி. சக்லா இசையமைத்துள்ளார்.

இதனிடையே இப்போதைய பாக். தேசிய கீதத்தின் தமிழாக்கம் அறிந்து கொள்வோமா?:

 

இந்தத் தூய நிலம்

என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும்.

இந்த அழகான நிலம்

என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும்.

மனத் திண்மையின் சின்னம் நீ,

ஓ! பாகிஸ்தான்!

தளர்வுறா உறுதியின் மையம்

என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும்.

சாமானியர்களின் சகோதரத்துவ வலிமையே

இந்தத் தூய நிலத்தின் நடைமுறை.

இந்த தேசம் இந்த நாடு இந்த ராஜ்யம்

என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும்.

இதயத்தோடு இணைந்த நம் இலக்கு

ஆசீர்வதிக்கப்படட்டும்.

பிறை நட்சத்திரக் கொடி –

வளர்ச்சிக்கும் முழுமைக்கும் வழிகாட்டி;

கடந்த காலப் பிரதிபலிப்பு;

நிகழ் காலப் பெருமிதம்;

எதிர் கால வாழ்க்கை.

எல்லாம் வல்ல இறைவனின் நிழல்!

Related Posts

error: Content is protected !!