மருத்துவ பரிசோதனைக்கு வரும் பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை! – நியூ ஹோப் மருத்துவமனை அதிரடி

மருத்துவ பரிசோதனைக்கு வரும் பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை! – நியூ ஹோப் மருத்துவமனை அதிரடி

மே மாதம் 28 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் சர்வதேச மகளிர் நல தினத்தையொட்டி, அன்றைய தேதியில் மருத்துவ பரிசோதனைக்கு வரும் அனைத்து பெண்களுக்கும் சென்னையில் இயங்கி வரும் நியூஹோப் மருத்துவமனை 50 சதவீத கட்டண சலுகையை அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சைமன் ஹெர்குலீஸ் பேசுகையில்,‘ 1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 28 ஆம் தேதியன்று அனைத்து வயதிலும் உள்ள மகளிருக்கான ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக சர்வதேச மகளிர் நல தினம் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு எங்களுடைய மருத்துவமனையில் அன்று அனைத்து வகையான பரிசோதனை, சிகிச்சை மற்றும் ஆபரேசனுக்காக வரும் பெண் நோயாளிகளுக்கு 50 சதவீத அளவிற்கு கட்டண சலுகையை அறிவித்திருக்கிறோம். இதனை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இன்றைய சூழலில் பெண்களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு குறைந்து வருகிறது. அது அதிகரிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த கட்டண சலுகையை அறிவித்திருக்கிறோம். ’ என்றார்.

இம்மருத்துவமனையின் மகப்பேறுவியல் மற்றும் புற்றுநோய் மருத்துவ நிபுணரான டாக்டர் நஸ் ரீன் பேசுகையில்,‘ இன்றுள்ள பெண்கள் பூப்பெய்தும் காலம் முதல் மாதவிடாய் சுழற்சி நிற்கும் காலம் வரை பல்வேறு வகையிலான கோளாறுகளையும், சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்கள். இதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. ஆனால் இதில் பெரும்பாலும் ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடுகளால் ஏற்படும் தடை என்று தெரிந்துகொள்வதில்லை. இத்தகைய பாதிப்பு ஏற்படும் போது அவர்கள் சாதாரணமாக ஒரு எளிய பரிசோதனையை செய்து கொண்டால் போதுமானது. எந்த பிரச்சினையையும் தொடக்க நிலையிலேயே கண்டறியலாம். சிகிச்சைப் பெற்று குணமடையலாம்.

அதே போல் இருபது வயதிற்கு மேம்பட்ட பெண்கள் தற்போதைய காலகட்டத்தில் குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆளாவது அதிகரித்திருக்கிறது. மூன்று பெண்களில் ஒருவர் இப்பிரச்சினைக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கர்ப்பப்பை வாய் கோளாறுகள், கருகுழாய் அடைப்பு, சினைமுட்டை உற்பத்தி மற்றும் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றை எளிய பரிசோதனைகளின் மூலம் துல்லியமாக அறிந்துகொண்டு அதற்கு நிவாரணமும், சிகிச்சையையும் பெற்று குணமடையலாம்.

மே மாதம் 28 ஆம் தேதி உலக பெண்கள் ஆரோக்கிய மேம்பாடு தினம் கொண்டாடப்படுவதால் அன்றைய தேதியில் எங்களுடைய மருத்துவமனைக்கு வரும் அனைத்து வயதைச் சார்ந்த பெண்களுக்கு நாங்கள் அவர்களின் பிரச்சனைகளை கண்டறியும் பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் ஐம்பது சத வீத கட்டண சலுகையில் வழங்கவிருக்கிறோம். இதனை பயன்படுத்திக் கொண்டு வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’ என்றார்.

டாக்டர் அபிதா பேசுகையில்,‘ இன்றைய தேதியில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெண்கள் தங்களது மார்பகங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளும் போது, சந்தேகப்படும்படியாக ஏதேனும் அசௌகரியங்கள் தெரிந்தால் உடனே மருத்துவமனைக்கு சென்று இதற்கான பாப்ஸ்மியர் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.

அதே போல் பாப்பிலோமா என்ற வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயிற்கான அறிகுறிகளையும் தெரிந்துகொண்டு அதற்குரிய தடுப்பூசிகளையும் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளவேண்டும். மே மாதம் 28 ஆம் தேதியன்று சர்வதேச மகளிர் நல தினம் என்பதால் அன்றைய தேதியில் எங்களுடைய நியூ ஹோப் மருத்துவமனைக்கு வருகைத்தரும் பெண்களுக்கு இந்த புற்றுநோயிற்கான பரிசோதனைகளை ஐம்பது சத கட்டண சலுகையில் மேற்கொள்கிறோம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பரிசோதனை செய்து கொண்டு, புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, அதற்காக தற்போதுள்ள ஆபரேசன், கீமோதெரபி போன்ற சிகிச்சைகளைப் பெற்று குணமடையலாம்.’ என்றார்.

இந்த மருத்துவமனையில் தொற்று தடுப்பு பிரிவு மருத்துவராக பணியாற்றும் டாக்டா பாக்யராஜ் பேசுகையில்,‘நியூ ஹோப் மருத்துவமனயில் தொற்று தடுப்பு பிரிவில் உள்ள மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள் என அனைவரும் நூறு சதம் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவதால் இந்த மருத்துவமனையில் சிகிச்சைப்பெறும் நோயாளிகளுக்கு அவர்களின் சிகிச்சை நூறு சதம் வெற்றியளிக்கிறது. இதனால் இந்த மருத்துவமனைக்கு இந்தியாவைத் தவிர இலங்கை, பங்களாதேஷ், துபாய், இங்கிலாந்து, ஆப்பிரிக்கா என பத்திற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து நோயாளிகள் வருகைத்தந்து சிகிச்சைப் பெற்று குணமடைந்து செல்கிறார்கள்.‘ என்றார்

Related Posts

error: Content is protected !!