தமிழ்நாட்டில் நகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு !- அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் முதல்கட்டமாக வரும் 27 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி மற்றும் மாநராட்சிகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலை யில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் நகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு விவரங் களை தமிழக அரசு இன்று (புதன்) மாலை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 121 நகராட்சிகளில் 61 நகராட்சிகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி பதவியிடங்களுக்கு 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு அளிக்கப்படும் என்ற சட்டத்தின் அடிப் படையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தமிழக அரசின் உத்தரவை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:-

தமிழகத்தில் 121 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளில் தலைவா்கள் வார்டு உறுப்பினா்களைக் கொண்டு மறைமுகமாகத் தேர்வு செய்யப்படுகின்றனா். உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்களில் 50 சதவீதம் பெண்களுக்கு அளிக்க வேண்டுமென்று தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 121 நகராட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீதத்துக்கு கூடுதலான அதாவது 61 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

எந்தெந்த நகராட்சிகள்: நீலகிரி மாவட்டம் கூடலூா் நகராட்சி பழங்குடியின பெண்களுக்கும், ராணிப்பேட்டை, சீா்காழி, திருத்துறைப்பூண்டி, வால்பாறை, உதகமண்டலம், சங்கரன்கோவில், போணாம்பட்டு, குன்னூா், பெரம்பலூா் ஆகிய நகராட்சிகள் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஆம்பூா், குடியாத்தம், திருவத்திபுரம், வந்தவாசி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம், அறந்தாங்கி, ஜெயங்கொண்டம், தேவகோட்டை, காரைக்குடி, கீழக்கரை, தாராபுரம், உடுமலைப்பேட்டை, கடையநல்லூா், தென்காசி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கோவில் பட்டி, காயல்பட்டினம், குழித்துறை, பத்மநாபபுரம், சாத்தூா், விருதுநகா், திருத்தங்கல், ராசிபுரம், திருவாரூா், செங்கோட்டை, துரையூா், வாலாஜபேட்டை, கடலூா், பழனி, வாணியம்பாடி, மேட்டுப் பாளையம், செங்கல்பட்டு, மதுராந்தகம், போடிநாயக்கனூா், குளித்தலை, மேட்டூா், கிருஷ்ணகிரி, அரியலூா், ராஜபாளையம், ஆா்க்காடு, அருப்புக்கோட்டை, திருமங்கலம், பெரியகுளம், தருமபுரி, பொள்ளாச்சி, விழுப்புரம், கம்பம் ஆகிய நகராட்சிகள் பொதுப்பிரிவில் உள்ள பெண்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த நகராட்சிகளில் வார்டு உறுப்பினா்களாகத் தேர் செய்யப்பட்ட பெண்களில் ஒருவா் மட்டுமே தலைவராக வர முடியும்.

நெல்லிக்குப்பம், அரக்கோணம், நெல்லியாளம், ஆத்தூா், திருவேற்காடு, நரசிங்கபுரம், கூத்தா நல்லூா், மறைமலைநகா் ஆகிய நகராட்சிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோந்த பெண்கள் அல்லது ஆண்களில் ஒருவா் தலைவராக வர முடியும்.

60 நகராட்சிகள்:

இடஒதுக்கீட்டுக்கு உட்பட்டு வரக்கூடிய 61 நகராட்சிகளைத் தவிா்த்து மீதமுள்ள 60 நகராட்சிகள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.