September 23, 2021

நீரில் உள்ள ஆர்சனிக்கை கண்டுபிடித்து நீக்கும் புதிய கருவி!

சர்வதேச அளவில் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குடிநீர் மிகவும் தூய்மையானது என்பது சாராம்சமாக கொண்டு சந்தைப்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் வேகமாக விரிவடைந்துவரும் மார்க்கெட்டா கவும் காணப்படுகிறது, குடிநீர் சந்தைப்படுத்தல் உலகில் வருடத்திற்கு 147 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்குரி யதாக இருந்து வருகிறது. பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீர் மிகவும் தூய்மையானது என்ற எண்ணம் உள்ள நிலையில்,Orb Media’ செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் மாறாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருந்தது. அதாவது ஒரு பாட்டில் குடிநீரில் டஜன் கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மைக்ரோஸ் கோபிக் பிளாஸ்டிக் துகள்கள் கூட இருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாம். பிளாஸ்டிக் துகள்கள் உள்பட பாலிப்ரொப்பிலீன், நைலான் மற்றும் பாலிதிலினெ தெரபத்தலேட் (PET) உள்ளிட்டவை இருந்து உள்ளது.

ஆய்வில் அதிர்ச்சியான தகவல் வெளியாகிய நிலையில் இருநிறுவனங்களை செய்தியாளர்கள் அணுகிய போது குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுவதை ஒப்புக்கொண்டன, ஆனால் நிறுவனங்கள் தரப்பில் ஆர்பின் ஆய்வில் கணிசமான அளவு அவை மிகைப்படுத்தி காட்டப்படுகிறது என கூறி உள்ளனர். உலகம் முழுவதும் எடுத்துக் கொள்ளப்பட்ட 93 சதவித மாதிரிகளில் இது போன்ற பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள நிலையில். மேற்கு வங்க மாநிலத்தில் குடிநீரில் உள்ள ஆர்சனிக் எனப்படும் நச்சுத் தன்மையை கண்டுபிடித்து நீக்கும் புதிய கருவியை உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.

அதாவது ஆர்சனிக் என்பது வேதியியல் பண்பு கொண்ட தனிமமாகும். இது பொதுவாக நச்சுத்தன்மை கொண்டதாக காணப்படுகிறது. ஆனால், சில வகை பாக்டீரியாக்கள் ஆர்சனிக் சேர்மங்களை வளர்சிதை மாற்ற சுவாசத்திற்குப் பயன்படுத்துகின்றன. எலிகள், வெள்ளை எலிகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட சில உயிரினங்களுக்கு ஆர்சனிக் உணவுக் கூட்டுப்பொருளாக அவசியம் தேவைப்படுகிறது. இருப்பினும் தேவைக்கு அதிகமான அளவில் எடுத்துக் கொள்ளப்படும்போது ஆர்சனிக் நச்சு பாதிப்புகளை உண்டாக்குகிறது. இந்த உலகம் முழுவதிலும் உள்ள மக்கள், நிலத்தடி நீரில் கலக்கும் ஆர்சனிக்கால் இடர்பாடுகளைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில்தான், நீரில் உள்ள ஆர்சனிக்கை கண்டுபிடித்து நீக்கும் புதிய கருவியை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐஎஸ்இஆர்), தனியார் நிறுவனத்துடன் இணைந்து புதிய கருவியை உருவாக்கியுள்ளது.

ஆர்சனிக் சென்சார் மற்றும் ரிமூவர் மீடியா என்ற புதிய கருவி நீரில் ஆர்சனில் உள்ளதா என்பதை கண்டறிந்து அதனை நீக்கி நீரை பாதுகாப்பானதாக மாற்றும். இது மிகவும் பயனுள்ளது. அதே சமயம் விலை குறைவானது என்று ஐஐஎஸ்இஆர் இயக்குநர் சவுரவ் பால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

இந்த கருவியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர் டாக்டர் ராஜா சண்முகம் கூறிய போது, “இக்கருவியில் உள்ள சென்சாரை ஆர்சனிக் உள்ள நீர் மீது காட்டும் போது அதன் நிறம் மாறுபடும். பின்னர் அதிலுள்ள ஆர்சனிக்கின் அளவு கண்டுபிடிக்கப்பட்டு, அதனை நீக்கும் பணி தொடரும். இதன் மூலம் ஆர்சனிக் இல்லாத பாதுகாப்பான நீரை உருவாக்க முடியும்” என்று தெரிவித்தார்.

இது குறித்து ஷாந்திஸ்வரூப் பட்நாகர் விருது பெற்ற டாக்டர் ராமசாமி கூறுகையில்,” நீரில் ஆர்சனிக் கலந்துள்ளது என்பதை மக்கள் பொதுவாகவே அறிந்துள்ளனர். ஆனால், அது ஆரம்ப நிலையில் உள்ளதா இதனால் பாதுகாப்புக்கு ஆபத்து உள்ளதா என்பது பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்று கூறினார்.  மேற்கு வங்கத்தில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீரானது ஆர்சனிக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கருவி மூலம் அம்மாவட்ட மக்கள் அதிக அளவு பயன்பெறுவர் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கையுடன் கூறினார்கள்