கிரெடிட், டெபிட் கார்டு புதிய விதிகள் : ஜனவரி முதல் அமல்!
இப்போதெல்லாம் உணவு, ஷாப்பிங் அல்லது முன்பதிவு வண்டிகள் என்று எதுவாக இருந்தாலும், மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்து மற்றும் பாஸ்வேர்டுகள் மற்றும் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை பின்னர் பயன்படுத்துவதற்கு சேமித்து வைத்திருக்கிறார்கள். இருப்பினும், ஆன்லைன் வங்கியுடன், ஆன்லைன் மோசடி விகிதமும் பெருமளவில் அதிகரித்துள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு, ஆன்லைனில் பணம் செலுத்துவதை பாதுகாப்பாக செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அனைத்து வணிகர்களையும் கட்டண கேட்வேகளையும் டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான வாடிக்கையாளர் விவரங்களை அகற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதை அடுத்து வரும் ஜனவரி முதல் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு டோக்கன் முறை பயன்படுத்தப்படும். இதில் வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு நம்பர், காலாவதி தேதி, CVV நம்பர், ஓடிபி போன்ற விவரங்களை வழங்கத் தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது
அதாவது தற்பொழுது ஒரு கடையில் ஒரு பொருளை வாங்கிவிட்டு அதற்கு உரிய விலையை செலுத்த நாம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்துகிறோம் அப்படி பயன்படுத்தும் பொழுது சம்பந்தப்பட்ட 15 இலக்க எண் மற்றும் கார்டு எது வரை செல்லுபடியாகும், கார்டின் சிவிவி எண் ஆகியவை வியாபாரியின் சாதனத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இதன் மூலம்
கார்டை உபயோகிக்கும் நபருக்கு ஆபத்தை ஏற்படுத்த இந்த விபரங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
இனி புதிய நடைமுறைப்படி கார்டுக்குப் பதிலாக டோக்கன் வழங்கப்படும். டோக்கன் மூலமாக பயனாளியின் கார்டு எண், சிவிவி எண்,. கார்டு காலாவதியாகும் தேதி ஆகியவை இராது. அதனால் வியாபாரி அந்த கார்டு தொடர்பான விவரங்களை பதிவு செய்துகொள்ள முடியாது. கிரெடிட், டெபிட் கார்டு தொடர்பான விபரங்கள் வியாபாரியால் பதிவு செய்ய முடியாத நிலையில் அவற்றை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு இராது.
இந்த நடைமுறைப்படி கார்டு வழங்கும் மாஸ்டர் கார்டு, விசா கார்டு. ரூபே கார்டு நிறுவனங்கள் இனிமேல் கார்டுக்கு பதிலாக டோக்கன்களை வழங்கும். ஒரு முறை டோக்கன் தவறாக பயன்படுத்தப்பட்டால் அதற்குப் பிறகு அந்த டோக்கன் செல்லுபடியாகாது அதனை ஒப்படைத்துவிட்டு புதிதாக வாங்கிக் கொள்ளலாம்.
கார்டு வைத்திருப்பவரின் விபரங்கள் எதுவும் டோக்கனில் இருக்காது.
அதனால் கார்டுதாரர்கள் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது