October 20, 2021

புத்தம் புதிய 100 ரூபாய் நோட்டு : ரிசர்வ் பேங்க் அச்சடிக்குது!

இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு பணமதிப்பழிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டது. அதன்படி, ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பழிக்கப்பட்டன. இதனால் நாட்டில் சில்லறை தட்டுப்பாடு நிலவியது.இதனை போக்கும் வகையில், ரூ.2000, ரூ.500 ரூபாய் நோட்டுகள் புதிய வடிவில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து முறையே ரூ.200, ரூ.50 மற்றும் ரூ.10 நோட்டுகள் வெளியிடப்பட்டன.

இதையடுத்து, தற்போது 100 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட இருக்கிறது. அதன்படி, மகாத்மா காந்தி படத்துடன் லாவண்டர் நிறத்தில் உள்ள புதிய 100 ரூபாய் நோட்டு வடிவம் இன்று (ஜூலை 19) வெளியிடப்பட்டுள்ளது.யுனெஸ்கோ உலக புராதன சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள குஜராத்தின் ராணி கி வாவ் (RANI KI VAV)என்ற குளத்தின் படம் இந்தரூபாய் நோட்டின் பின்புறம் இடம் பெற்றுள்ளது. மேலும்,

தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னமும், ஸ்லோகனும் இந்த நோட்டில் இடம் பெற்றுள்ளது.

இந்த நோட்டுகள் பழைய ரூ. 100 நோட்டை விட அளவில் சிறியதாகவும் புதிய 10 ரூபாய் நோட்டை விட பெரியதாகவும்இருக்கும். புதிய நோட்டுகள் விடப்பட்டாலும்,தற்போதுள்ள 100 ரூபாய் நோட்டுகளும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்கான அச்சு பணிகள் தொடங்கிவிட்டன. இந்த புதிய ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் எனத் தெரிகிறது.