மீண்டும் லாக் டவுன் : நெதர்லாந்து பிரதமர் அறிவிப்பு!

மீண்டும் லாக் டவுன் : நெதர்லாந்து பிரதமர் அறிவிப்பு!

நெதர்லாந்து நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒமைக்கிரான் தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டி தொலைக்காட்சியில் புதிய ஊரடங்கு பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

நெதர்லாந்தில் கொரானோ வைரஸின் ஐந்தாவது தொற்றுஅலை படு வேகமாக பரவி வருகிறது. புதிதாக தெற்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரானோ வைரஸ் ஒமைக்கிரான் தான் இதற்கு காரணம் என்று ருட்டி தெரிவித்தார். இதை அடுத்து பிரதமர் வெளியிட்ட புதிய லாக் டவுன் அறிவிப்பின்படி எல்லா அத்தியாவசிய மாற்ற பொருள்களை விற்கும் கடைகள் அனைத்தும் ஜனவரி மாதம் 15ஆம் தேதி வரை மூடப்படும் ஒரு வீட்டுக்கு வெளியில் இருந்து விருந்தாளிகளாக ஒரே நேரத்தில் இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள். டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் 26ம் தேதி வரையும் கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி 4 விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவார்கள் அதேபோல புத்தாண்டு தினத்தன்றும் அதற்கு முந்திய நாளிலும் 4 விருந்தாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் தெரிவித்தார் ஜனவரி மாதம் 9ம் தேதி வரை நெதர்லாந்தில் உள்ள எல்லாப் பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டிருக்கும்.

இத்தனைக்கும் நெதர்லாந்து நாட்டில் 85% பேர் முழு அளவில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் 9 சதவீதம் பேருக்கு பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார்.ஆனாலும் இந்த லாக் டவுன் காலத்தைப் பயன்படுத்தி எல்லோரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்த லாக் டவுன் காலத்தை பயன்படுத்திக்கொண்டு மருத்துவமனைகள் கூடுதல் நோயாளிகளுக்கு இடமளிக்கும் வகையில் தங்களை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவமனைகளை அவர் கேட்டுக்கொண்டார்.

நெதர்லாந்து பிரதமர் புதிய லாக் டவுன் அறிவிப்பை தொலைக்காட்சி மூலம் வெளியிட்டு இருப்பதால் கிறிஸ்துமஸ் கொள்முதலுக்காக மக்கள் சூப்பர் மார்க்கெட்களை முற்றுகை இட்டார்கள் என்பது தனி ரிப்போர்ட்.

error: Content is protected !!