வாழ்த்துகிறேன் நிஜ தலையை!

தொடர்ந்து நான் எழுதி வரும் விஷயத்தை ஒருவர் திரைப்படத்தில் பேசினால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது.. நேர்க்கொண்ட பார்வை.

குடும்பப் பெண்..

வேலைக்கு போனாலும், எது செய்தாலும் குடும்ப பெண்தான். அதை வார்த்தையாய் குறிப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை .

பெண்ணை புனிதவதி, குடும்பப் பெண், தே..யா எது சொல்லியும் அழைக்க தேவையில்லை. .ஒரு ஆண் ஆண் .ஒரு பெண்.. பெண்தான். புனிதமும் வேணாம்..மலினமும் வேணாம் .சக மனிதி போதும்..நீயும் சகாவு.

என் சில தோழிகளுக்கு பார்ட்டி செல்லும் பழக்கம் உண்டு

சில தோழிகள் பியர் அடிப்பார்கள்.

ஏன் நாங்கள் பெண்கள் அனைவருமே மோசமான ஜோக்குகள் பகிர்வோம் .

சிலர் தோழிகள் காதலிக்கிறார்கள் .சிலர் திருமணம் முறிந்து இருக்கிறார்கள்.

சிலர் சிங்கிள் பேரண்ட் .சிலர் சிங்கிள்தான்.

அரிதாக ஒருவர் தம் அடிப்பார்.

திருமண மனகசப்பில் அது தாண்டி காதலிக்கும் தோழிகள் சிலரின் கதையும் தெரியும். இது தோழிகள்..

இது கலந்ததுதான் சமூகம்.

நண்பன் என முகமூடி அணிந்த சிலர் பற்றி..

ஒரு உலக உத்தமன் இன்பாக்சில். உத்தமியா, பத்தினியா என்றான். புல்ஷிட் .இவன் மனைவியை தவிர அத்தனை பேரையும் உரித்து பார்க்க ஆசைப்படுபவன் .

இன்னொருபவன். பாரதி, கவிதை, நிலா என பெண்கள் பக்கம் வலை வீசுவான்..தன் பின்னால் வரும் வரை. வந்துட்டா அவளை ஒரு வழியாக்கி ஓட செய்வான்.

இன்னொருவன் வா என கேட்பான்..அதெல்லாம் பிடிக்காது என நாசூக்கா சொன்னா..ஒரு மாசம் கழித்தும் கேட்பான்.

ஏன் ஆண்..பெண்ணை துரத்திக்கொண்டே இருக்கிறான் .இயல்பாய் அன்பாய் மலர்வது காதல் என ஆண்களுக்கு கற்பிக்கப்படவே இல்லை.

அன்புக்கும், காமத்திற்கும், விருப்பத்திற்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

ஒட்டு மொத்த ஆண் உலகை வெறுக்க தோன்றும் பொழுது..அங்கிருந்துதான் அஜித் போன்ற நல்லவனும் இருக்கிறான்..அவன் மட்டுமே இருக்கிறான்.

ஒரு ஆண் தனியே வாழ முடிகிறது.

சிங்கிளாய் காலம் தள்ள முடிகிறது..

ஏன் பெண்ணால் இயலவில்லை .

எதிர்த்து பேசினால் ஆசிட் வீசப்படும்..இல்லை மானபங்க படுத்தபடுவாள்

என் வீடு உத்தமிக்ள் .இந்த பொண்ணுகள் ஒரு மாதிரி .இது எல்லா..எல்ல்லா ஆண்களுக்கும் பொருந்தும். அவன் வீட்டு பெண்ணும் பியர் அடிக்க வாய்ப்புண்டு என மறப்பான்..அவளுக்கும் நாம் பேசுவோம்.

சாக்‌ஷி போல் உடை அணிந்தால் தவறு…ஷெரின் போல் பேசினால் என்ன வேணா செய்யலாம் என்பதில்லை .எந்த இடத்தில், எப்படி இருப்பினும் ஆண், பெண் சம்மதமின்றி எல்லாம் தவறுதான்.

கை வைக்காதேடா .என்றால் கை வைக்காதே ..அதற்கும் ..பெண் கேரக்டருக்கும் சம்மந்தம் இல்லை..

பெண் குடிப்பது தவறுன்னா ஆண் குடிப்பதும்.. தனியே வசிப்பது தவறுன்னா ஆண் வசிப்பதும்..

தனியே பார்ட்டிக்கு செல்வது தவறுன்னா ஆண் செய்வதும்..

தவறுன்னா பொதுவில் வைங்க..

பெண் போக பொருள் அல்ல..இஷடத்திற்கு நுகர..

வாழ்த்துகள் அஜித். செம்ம்ம துணிவு..வாழ்த்துகிறேன். நிஜ தலையை.

தமிழில் எடுக்க தனி தில் வேணும்..

இன்னும் பேசுவோம்..

அது வரை பெண்களே .ஒன்றே ஒன்றில் நிலைத்திருப்போம்..

நேர்க்கொண்ட பார்வையில்..

#நேர்க்கொண்ட_பார்வை

கிருத்திகா தரன்