நெஞ்சுக்கு நீதி திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ் !

நெஞ்சுக்கு நீதி திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ் !

யாரிப்பாளர் போனி கபூர் வழங்கும், ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெயலர் வெளியீட்டு விழா இன்று திரைபிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள கோலகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் பேசியது…

நெஞ்சுக்கு நீதி அனைவரும் பார்க்க வேண்டிய படம், இந்த படத்தில் வேலை பார்த்தது பெருமை. படத்தில் நான்கு பாடல்கள். யுகபாரதி ஆழமான வரிகளை கொடுத்துள்ளார், அதற்கு நன்றி. இது எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்த படத்தில் பல விஷயங்களை பயன்படுத்தியுள்ளோம். என்னுடைய பாடல்களுக்கு நீங்கள் எப்போதும் வரவேற்பு கொடுத்துள்ளீர்கள். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்த, அருண்ராஜாவிற்கு நன்றி. தயாரிப்பாளர் போனிகபூர், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், உதயநிதி சார் அவர்களுக்கு நன்றி. ஆயிரம் பொறுப்புகள் இருந்தாலும் உதயநிதி கூலாக இருக்கிறார். படத்தின் பேக்ரவுண்ட் பணிகள் போய்கொண்டிருக்கிறது. படம் நன்றாக வந்துள்ளது. படத்தில் தொழில்நுட்ப குழு சிறப்பாக வேலை பார்த்துள்ளனர். எல்லோருக்கும் நன்றி. இது என்னுடைய 5 வது படம், எனக்கு மகிழ்ச்சி. எனது நண்பர் சிவாவிற்கு நன்றி. பாடல் பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள். நன்றி.

பாடலாசிரியர் யுகபாரதி பேசியது,

இந்த படம் முழுக்க முழுக்க உதயநிதி நடித்த முதல் முழு அரசியல் திரைப்படம். ஹிந்தியில் வெளியான ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக். அது அனைவரும் சமம் என்ற சட்ட பிரிவு, இது அம்பேத்கர் எழுதிய சட்டம். இயக்குனர் அருண்ராஜா காமராஜ் பல பாடல்களை எழுதியுள்ளார், என்னை அவர் கூப்பிட்டது எனக்கு ஆச்சர்யம். ஹிந்தி படத்தில் இருக்கும் அரசியல் வேறு, தமிழக அரசியல் வேறு, அதற்காக பல மாற்றங்களை செய்துள்ளனர், அதற்காகவே இந்த படத்தை பார்க்க வேண்டும். படத்தில் நாட்டுபுற பாடல் ஒன்று வருகிறது. அதற்காக பெரும் உழைப்பை போட்டுள்ளனர், படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்.

தயாரிப்பாளர் போனி கபூர் பேசியது…

நான் ஆர்டிகள் 15 படத்தை அதிகமுறை பார்த்துள்ளேன். அருண்ராஜா இந்த படத்தை ஒரிஜினலை விட சிறப்பாக எடுத்துள்ளார். தமிழகத்தின் வாழ்வியல் நுணுக்கங்களை அவர் படத்தில் பதிவு செய்துள்ளார். ராகுலுக்கு நன்றி கூற வேண்டும். மொத்த குழுவிற்கும் பெரிய நன்றி

நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது…..

“உதயநிதி பல வேலைகளை பார்க்கிறார், அது அவரது குடும்ப இரத்தத்திலேயே இருக்கிறது. உண்மையான டான் உதயநிதி தான். இத்தனை வருட பழக்கத்தில் அவர் எனக்கு பாசிடிவிட்டியை மட்டுமே தந்துள்ளார். நெஞ்சுக்கு நீதி பவர்வுல் டைட்டில். எனக்கு ரீமேக் எடுக்க பயம், ஆனால் அருண்ராஜா இப்படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளார். அருண்ராஜா எனது நண்பன் என்பது பெருமை. கனா போன்ற படத்தை எடுத்து பெரிய வெற்றியை கொடுத்துள்ளார். அருண் பெரிய இழப்பில் இருந்த போது அவனுக்கு உறுதுணையாக இருந்தது உதயநிதிதான். இந்த நெஞ்சுக்கு நீதி பெரிய வெற்றியடையும். யுகபாரதி, வசனகர்த்தா தமிழ், ஒளிப்பதிவாளர் தினேஷ், இசையமைப்பாளர் திபு மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். போனி கபூர் சாருக்கு நன்றி.

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் பேசியது….

படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. இந்த வாய்ப்பை அளித்ததற்கு நன்றி. படம் பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியது…

முதல் நன்றி தாத்தா கலைஞருக்கு- அவர் தந்தது தான் இந்த டைட்டில். படத்தின் டைட்டிலுக்கு நியாயம் செய்ய முயற்சித்து இருக்கிறோம். போனிகபூர் என்னை அழைத்து ரீமேக் பண்ணலாம் என்று கூறியபோது., இப்படத்திற்கு யாரை இயக்குனராக வைத்து பண்ணலாம் என சந்தேகம் இருந்தது. யாரும் முன்வரவில்லை. கனா படத்தை பார்த்துவிட்டு, அருணை கூப்பிட்ட போது, அருண் ஒத்து கொண்டார். நான் நெஞ்சுக்கு நீதி டைட்டில் உரிமை பற்றி, அப்பாவிடம் கேட்டபோது, பார்த்து பண்ணுங்க என கூறினார். படம் எடுக்கும் போது, கொரோனா பெரிய தடையாக இருந்தது. அருண் மனைவி மற்றும் படத்தில் பணியாற்றி கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இந்த படத்தின் வெற்றி சமர்பணம். அருண் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்கு செல்வார். நடன இயக்குனர், கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர் தினேஷ் அவர்களுக்கு நன்றி. இந்தப்படம் ஒத்துகொண்ட போது பயமாக இருந்தது, எப்படி போலீஸாக நடிக்க போகிறேன் என்ற பயம் இருந்தது. நான் போலீஸாக திரையில் சிறப்பாக வந்ததற்கு பெரிய காரணம் தினேஷ். ஷிவானி ராஜசேகர், குறிஞ்சி கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். பாடல்வரிகள் பவர்புல்லாக இருக்கும். இந்த படத்திற்கு ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பெரிய பலம். எல்லோருக்கும் நன்றி. படம் சமூகநீதி பேசும் படம், இந்த சமயத்தில் தேவையான ஒரு படம், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கு. நன்றி.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை அனுபவ் சின்ஹா, எழுதியுள்ளார். ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன். B செய்துள்ளார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார், எடிட்டிங் ரூபன், கலை இயக்கம் வினோத் ராஜ்குமார் மற்றும் லால்குடி N இளையராஜா, ஸ்டன்னர் சாம் ஸ்டண்ட், C H பாலு ஸ்டில்ஸ், பாடல்கள் யுகபாரதி, அருண்ராஜா காமராஜ் மற்றும் தமிழரசன் பச்சமுத்து வசனம் எழுதியுள்ளனர், லீலாவதி நடன இயக்குனர் , அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளர், ஒலி வடிவமைப்பு சுரேன் மற்றும் அழகியகூத்தன், VFX ஹரிஹர சுதன் (Lorven Studio) ஆகியோர் பணியாற்றியுள்ளனர். தயாரிப்பு நிர்வாகி S.P. சொக்கலிங்கம், காஸ்ட்யூமர் K.செல்வம், ஹேர் மற்றும் மேக்கப் சக்திவேல், விளம்பர வடிவமைப்புகள் கோபி பிரசன்னா ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

error: Content is protected !!