நெஞ்சம் மறப்பதில்லை பட விமர்சனம் By ஆந்தையார்!

கோலிவுட்டின் புரியாத புதிர் செல்வராகவன் – இவரை நவீன பிக்காஸோ என்றழைப்போர் ஏராளமுண்டு அதில் உண்மையுமிருக்கலாம்,,அதற்காக நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை எல்லாம் நெஞ்சு புடைக்க பாராட்டுவதெல்லாம் எஸ் ஜெ சூர்யா-வின் ஓவர் ஆக்டிங்-கை மிஞ்சி போவதுதான் சோகம்..


ஓ கே.. இப்ப இந்த படத்தோட கதை என்னன்னா கேட்டா.. ரொம்ப சிம்பிள்.. ஹீரோ ரோலில் இருக்கும் எஸ். ஜே. சூர்யா கல்யாணமாகி குழந்தையுடன் வசதியாக வாழ்பவர். மட்டமான புத்திக் கொண்ட அவர் வீட்டுக்கு வரும் வேலைக்காரி (ரெஜினா) மேல் மோகம் கொண்டு கற்பழித்து, கொலையும் செய்து விடுவார். இந்த கொடூர கற்பழிப்பு & கொலையில் ஹீரோ கோஷ்டி சிலரும் உடந்தை..அப்படி கொலையான பெண்ணான ரெஜினா பேயாக வந்து மேற்படி நபர்களை பழி வாங்குவதே கதை.

நாயகன் என்ற போர்வையில் எஸ்.ஜே. சூர்யா வழங்கும் நடிப்பை நடிப்பு என்ற எல்லைக் கோட்டுக்குள் திணித்து விட முடியாது.. சிவாஜியும், வி கே ராமசாமியும், மேஜர் சுந்தர்ராஜனும் ஒரு சேர மறுபடியும் வந்தால் எப்படி இருக்குமோ அப்படி.. என்று செல்வராகவன் சொன்னதை புரிந்து ஓவர் டோஸ் கொடுத்து திகட்ட வைத்து விட்டார். பேய் நாயகியாக வரும் ரெஜினா. குழந்தையுடன் கொஞ்சுவது தொடங்கி ஆக்சன் தனமாக பாய்ந்து அடிப்பது வரை பர்பெக்டாக செய்திருக்கிறார். நந்திதா ஒரு சபலக் கணவனின் மனைவி ரோலை புரிந்து வந்து போகிறார்

கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணா-தான் இந்த படத்தின் முதுகெலும்பாக தோன்றுகிறார் வித விதமான லைட்டிங் மற்றும் கோணத்தில் காட்சிகளைக் காட்டி லயிக்க வைக்க முயல்கிறார். யுவன் வழக்கம் போல் ஸ்கோர் செய்திருக்கிறார்.

ஆனால் ஆரம்ப வரிகளில் சொன்னது போல் நவீன விக்ரமாதித்தனாகிய செல்வராகவன் ஒரு பேய் பட பழிவாங்கலை மறைந்த இராம நாராயணனைவிட மோசமாக வழங்கி நோகடித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்..

மொத்தத்தில் நெஞ்சம் மறப்பதில்லை – கவுத்திப்புட்டாய்ங்க

மார்க் 2/5

aanthai

Recent Posts

மேதகு 2 – விமர்சனம்1

மேதகு திரைக்களம் தயாரிப்பில் இரா. கோ. யோகேந்திரனின் ஆக்கம் மற்றும் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் மேதகு 2. பிரபாகரனின்…

59 mins ago

இந்த மெட்ராஸ் டே தினம் -தமிழர், தமிழ்நாட்டு பண்பாடு, வரலாற்றுக்கு புறம்பானது!

சென்னையின் வயது 383 அல்ல, 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. சங்கம் காலம் தொட்டு எப்படி கீழடி போன்ற இடங்கள்…

1 hour ago

வங்க எழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘ஆனந்தம் மடம்’ நாவலைத் தழுவி தயாராகும் ‘1770’

சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளரும், இயக்குநருமான ராம் கமல் முகர்ஜி எழுத்தில் தயாரான ‘1770’ என பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தை…

2 hours ago

இலங்கையில் மீண்டும் சிங்களத்திலும், தமிழிலும் தேசிய கீதம் !- ரணில் விக்ரமசிங்கே அரசு அறிவிப்பு!

இலங்கையில் 1949-ல் சுதந்திர தினத்தில் சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது நல்லதம்பி என்பவர் சிங்கள கீதத்தைத் தமிழில்…

3 hours ago

கொடைபட இசை வெளியீட்டு விழாத்துளிகள்!

எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின் கூட்டு முயற்சியில் ஒரு அழகான படைப்பாக…

1 day ago

திருச்சிற்றம்பலம் பட விமர்சனம்!

சினிமாவில் பேமிலி படம் என்றால் சில ஃபார்முலா வைத்திருக்கிறார்கள். அம்மா. அப்பா, பங்காளி, பகையாளி, உறவாளி என்று பெருங்கூட்டத்தை இணைத்து…

1 day ago

This website uses cookies.