நீட் தேர்வு முடிவுகள் வெளியானது: தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைவு!

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது: தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைவு!

நேற்று நள்ளிரவுக்கு மேல் வெளியான நீட் தேர்வு முடிவுகள்படி இந்தாண்டு தேர்ச்சி மிகக்குறைவாக உள்ளது. தமிழகத்தில் 1,32,167 பேர் தேர்வு எழுதியதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக மாணவர் திரிதேவ் விநாயக் 705 மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், 702 மதிப்பெண் பெற்று ஹரினி 2வது இடம் பிடித்துள்ளார்.

நடப்பாண்டு நாடு முழுவதும் 17.64 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினார். இதில், 9.93 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். என்டிஏ வெளியிட்ட அறிக்கையின் படி, நீட் தேர்வில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

நீட் நுழைவுத் தேர்வில் 429160 ஆண்கள், 563902 பெண்கள், 7 திருநங்கைகள் என மொத்தம் 993069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில், உத்தரப் பிரதேசம் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 1.17 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 1.13 லட்சம் பேரும், ராஜஸ்தானில் 82,54 பேரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் 6% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 57.43% பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 51.28% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில், 1,42,894 தமிழக மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால் 1,32,167 பேர் மட்டுமே தேர்வெழுதினர்.

தேர்வு எழுதிய 1,32,167 பேரில், தமிழ் வழியில் 31,965 மாணவர்கள் தேர்வெழுதினர். மொத்ததில், 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 99,610 பேர் தேர்வெழுதி அதில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான பயிற்சிகளை முறையாக தமிழகஅரசு மேற்கொள்ளாததும், நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறிய நிலையில், அதை முடியாத நிலையில், நீட் தேர்வை எதிர்கொள்ள கூறியதாலும், தேர்ச்சி விகிதம் குறைந்து விட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

error: Content is protected !!