ஆன்லைனில் நீட் எக்ஸாமா? நோ சான்ஸ் – மத்திய அரசு

ஆன்லைனில் நீட் எக்ஸாமா? நோ சான்ஸ் – மத்திய அரசு

நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை. திட்டமிட்டபடி நடத்தப்படும். அதே சமயம் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த இயலாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த நீட்தேர்வு ஒத்தி வைக்கப்பட்ட மே மாதம் நடக்க இருந்தது.அப்பொழுது தேர்வு எழுதும் மையம் பிற மாவட்டங்களில் இருந்தால் மாற்றி அமைக்கும் முறையை அப்பொழுது கொண்டு வந்து, மே மாதம் 15-ம் தேதி நடக்க ஆயத்தமானது.ஆனால் மே மாதம் கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளதால் தேர்வு நடத்த இயலாத சூழ்நிலை வந்தது.இந்த தேர்வினை நிச்சயமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேர்வு நடத்துவதற்கான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்வினை ஆன்லைன் மூலமாக நடத்த வேண்டும் என வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஆன்லைன் மூலமாக தேர்வினை நடத்த இயலாது என தேசிய தேர்வு முகாமை திட்டவட்டமாக கூறியுள்ளது.இந்திய நாட்டு மக்களின் சமநிலை கொண்டோம், தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் மற்றும் விடைகள் எழுத்து பூர்வமாகவே அமைய வேண்டும் என்றும் தேசிய தேர்வு மையம் கூறியுள்ளது.இதனை ஆன்லைன் மூலமாக நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று என்று தேசிய தேர்வு முகாமை கூறியுள்ளது.

Related Posts

error: Content is protected !!