NDTV : மூடி மறைக்கப்படும் பித்தலாட்டங்கள்!

NDTV : மூடி மறைக்கப்படும் பித்தலாட்டங்கள்!

மீபத்தில் NDTV (New Delhi TeleVision ) அதானியின் கைக்கு கை மாறிவிட்டது. அது என்னவோ பத்தினி மீடியாக்களின் குரல்வளையை அதானியின் மூலம் சட்டத்தத்திற்கு புறம்பாக பாஜக கைப்பற்றுகிறதா என்று சீன அடிமைகள கதறும் டிபேட்கள் சேனல்களில் ஹாட்டாக இருப்பதை எங்கும் காணலாம். அதன் பின்னால் ஒளிந்திருக்கும் மீடியாக்களால் மறைக்கப்பட்ட உண்மைகள் என்ன?

NDTV பிரனவ் ராய், ராதிகா ராய் (Radhika Roy Prannoy Roy Holding-RRPR) என்றவர்களால் ஒளிபரப்பு மீடியாக்கள் தனியார் மயமாக்கப்பட்டபோது தொடங்கப்பட்டது. அதற்கு India Bulld மூலம் 400 கோடிகள் கடன் பெற்று பின்னர் ICICI க்கு மாறியது. அந்த கடன் சட்டத்திற்கு புறம்பானது என்று செபியின் சட்டங்கள் அதை கட்டுப்படுத்த, அந்த கடனை அம்பானியின் கட்டுப்பாட்டில் இருந்த Vishvapradhan Commercial Pvt. Ltd. (VCPL) என்ற நிறுவனம் ஏற்றுக்கொண்டது. அப்போது RRPR உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது, அதாவது 29.18% பங்குகளை அடமானமாகவும், அதை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும் உரிமையுடன் வழங்கப்பட்டது. ஆனால் அந்த உண்மைகளை இந்த ராய்கள் நிறுவ்னத்த்திடம் மறைத்துவிட்டனர்.

அதன் பின்னர், NDTV ல் நடந்த பல முறைகடுகளால் அதன் நிர்வாகம் தள்ளாடியது. இந்த நிலையில் VCPL நிறுவனத்தை அம்பானி நிறுவனம் வாங்கியது, அதன் மூலம் ஏறகனவே இருந்த ஒப்பந்தப்படி 29.18% பங்குகள் அதானி குரூப்புக்கு போனது. அதாவது ராய்களுக்கு இருந்த மொத்த பங்கே 32.26%, அதில் பெரும்பங்கு இப்போது அதானியிடம் போய்விட்டது. உலகெல்லாம் நடக்கும் பல கண்ணுக்கு தெரியாத ரகசியங்களை மக்களுக்கு சொன்ன NDTV க்கு தன் பங்குகள் தன் கைவிட்டு போனது SEBI நிறுவனம் சொல்லித்தான் தெரிந்தது என்பது உச்சகட்ட வேடிக்கை.

அது மட்டுமல்ல இன்னும் 26% பங்குகளை அதானி குழமம் ஓபன் ஆபர் மூலம் வாங்குவதாக அறிவித்தது. அதன் மூலம் 55% பங்குகள் அதானி குரூப்புக்கு போய்விடும், அத்தொடு ராய்களுக்கு எதிர்காலமும் கூடவே போய்விடும். இது சட்ட ரீதியாக எந்த தவறையும் அதானி நிறுவனம் செய்யவில்லை. ஆனால் சீன அடிமை ஊடகங்கள் தவறான தொடர்புகள் மூலம் அவை எப்படியெல்லாம் நிதி பெற்றது என்பதெல்லாம் நாமோ, அரசோ கண்டுகொள்ளக்கூடாது என்கிறது!

அதானி நிறுவனம் மட்டுமல்ல, அம்பானியின் முதலீட்டில் பல TV க்கள் இருக்கிறது என்பதையும் பலர் அறிந்திருக்கவில்லை. அது எப்படி கார்ப்பொரேட்கள் மீடியாக்களை கைப்பற்றலாம் என்று கேட்கும் கிறுக்கனுகளுக்கு தெரியாது, சன் டிவி கார்ப்பொரேட் நிறுவ்னம் என்பது. இன்னும் Times of India உற்பட இந்திய செய்தி ஊடக மீடியாக்கள் பலவும் மேலை நாட்டு சர்சச்சுகளின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டு இன்னும்கூட அதன் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது என்று. அதாவது வாடிகனின் கட்டுப்பாட்டில் ஒரு டிவி இருக்கலாம் ஆனால் அதானியின் கட்டுப்பாட்டில் அது வரக்கூடாது என்பது சொல்லப்படாத விதி.

ஆனால் உலகம் முழுவதும் உள்ள இந்த செய்தி துறை தொலைகாட்சிகள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் மேற்சொன்ன சர்ச்சுகள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் சீனா அவர்களை பின் வாசல் வழியாக அமெரிக்க செய்தி ஊடக நிறுவனஙகளையே வாங்கியது என்பது கேலிக்கூத்து! ட்ரம் மீண்டும் வெற்றிபெருவார் என்ற ஸ்திரமான சூழ்னிலயில், கடைசி நேர மாறுதலால் பைடன் அமெரிக்க ஜனாதிபதி ஆனது சீன மீடியாக்களால்தான் என்பது பரவலாக நம்பப்படும் உண்மை. நியூயார்க் டைம்ஸில் அடிக்கடி மோடி எதிர்ப்பு கட்டுரைகள் வரும், அது எப்படி நிகழ்கிறது? தமிழகத்தை பொறுத்து அவை முற்றிலும் ஓங்கோல் ராஜ குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை நாம்.சொல்லித்தான் தெரிய வேண்டுமா? அடுத்து தமிழகத்தில் உள்ள கேடி பிரதர்ஸுக்கு எப்போது ஆப்பு என்று எதிர் பார்க்கலாமா?

மரு. தெய்வசிகாமணி

error: Content is protected !!