விக்னேஷ் சிவன் & நயன்தாரா ஜோடி பிரஸ் மீட்! – வீடியோ!!

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷெர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்

இதைத்தொடர்ந்து திருமணத்திற்கு முன்னர் சொன்னபடி இன்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி. இதில் முதலில் பேசிய நயன்தாரா, உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கு மிக்க நன்றி. தற்போது எங்களுக்கு திருமணம் நடந்துவிட்டது. அதனால் இனிமேலும் உங்களுக்கு ஆதரவு எங்களுக்கு தேவை என்று தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய விக்னேஷ் சிவன், நயன்தாராவை முதல்முதலில் கதைச் சொல்லதான் சந்தித்தேன். தற்போது இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. அதனால் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் என்பதற்காக தான் இங்கு வந்தோம் . ஆமாங்க.. ‘நானும் ரவுடி தான் படத்தின் கதையை செல்வதற்காக நயன்தாராவை நான் முதன் முதலாக இந்த ஹோட்டல்ல தான் சந்தித்தேன்’ என்று நெகிழ்ச்சியாக கூறினார்.