நயன்தாரா நடிக்கும் “டோரா” வின் பாடல்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியீடு!

நயன்தாரா நடிக்கும் “டோரா” வின் பாடல்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியீடு!

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் வி,ஹிதேஷ் ஜபக் வழங்க அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகும் படம் “டோரா” நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் உடன் தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் கார்தான் முக்கிய கேரக்டர். நயன்தாராவுக்கு சொந்தமான கார் பலரை துரத்தித் துரத்திப் போய் கொன்று விட, கொலைபழி என்னவோ நயன் மீது விழுகிறது.ஆனால் இந்த கார் தான் கொலை பண்ணியது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? அதனால் நயன் ஓடுகிறார், ஓடுகிறார்… கார் மனமிறங்கி வந்து, என்ன பிரச்னை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் வரை ஓடுகிறார். அது எப்படி என்பதையெல்லாம் சுவைபட ஸ்கிரீன் பிளே அமைத்துள்ளார்களாம்.

dora dec 3

தற்போது இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சற்குணம் சினிமாஸ் முதல் பிரதி முறையில் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் நிறுவனத்திற்காக தயாரித்துள்ளது.இப்படத்திற்கு இசை விவேக் – மெரிவின், ஓளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன், படத்தொகுப்பு – கோபி கிருஷ்ணா.

மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் “டோரா” படத்தின் இசை உரிமையை சோனி முயுசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதையடுத்து டோரா படத்தின் பாடல்கள் அனைத்தும் சிங்கிள் டிராக்காக சோனி முயுசிக் டிஜிட்டல் தளத்தில் வெளியிடவுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் இன்னும் சில தினங்களில், வெளியிடவுள்ள நிலையில், இப்பாடலை தொடர்ந்து இப்படத்தின் மற்ற பாடல்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியிடப்படவுள்ளது.

error: Content is protected !!