பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஜெயிலில் இருந்து விடுதலை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஜெயிலில் இருந்து விடுதலை!

ஆட்சியில் இருந்த போது செய்த ஊழல் வழக்கில் சிக்கி சிறைதண்டனை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் மருமகன் முகமது சஃப்தார் ஆகியோரின் சிறை தண்டனையை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இன்று தற்காலிகமாக ரத்து செய்து தீர்ப்பளித்தது. அவர்கள் மூவரையும் உடனடியாக விடுதலை செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கணக்கில் வராத பணத்தில் லண்டன் ஏவன்பீல்ட் நகரில் ஆடம்பர சொகுசு அபார்ட்மெண்டுகளை வாங்கிய வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்புக்கு 11 வருடம் சிறை தண்டனை வழங்கியது நேஷனல் அக்கவுண்டபிளிட்டி பீரோ .அதே வழக்கில் அவரது மகள் மரியமுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவரது கணவரும் ஓய்வு பெற்ற காப்டனுமான முகமது சஃப்தாருக்கு ஒரு வருட சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.அவர்கள் மூவரும் பாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நவாஸ் ஷரிப் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்கக்கூடாது. மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்ய நவாஸ் ஷரிப்புக்கும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இருவருக்கும் உரிமை இல்லை என்று நேஷனல் அக்கவுண்டபிளிட்டி பீரோ .

சார்பில் வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். அவர்கள் வேண்டுமென்றே வழக்கு விசாரணையை தாமதம் செய்வதாக அவர்களுக்கு ரூ.20,000 அபராதம் விதிப்பதாக உயர்நீதிமன்றம் கூறியது.

இந்த மேல் முறையீட்டு மனுவை இன்று விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று நவாஸ் ஷரிப், அவரது மகள் மற்றும் மருமகனுக்கு அளித்த சிறை தண்டனையை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டது. சிறையில் இருக்கும் மூவரையும் உடனடியாக விடுதலை செய்யும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நவாஸ் அவரது மகள் மற்றும் மருமகன் மூவரும் 5 லட்சம் ரூபாய் பிணைய தொகையாக நீதிமன்றத்தில் செலுத்தவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இன்று தீர்ப்பு அளிக்கும் போது நவாஸ் ஷரிப்பின் சகோதரர் செபாஸ் ஷரிப் உட்பட முஸ்லிம் லீக் கட்சியின் பல தலைவர்கள் நீதிமன்றத்தில் உடன் இருந்தனர்.

error: Content is protected !!