இந்திய கடற்படையின் முதல் பெண் விமானிகளின் அணி !

இந்திய கடற்படையில் உளவு விமானத்தின் விமானிகளாக பணியாற்ற முதல்முறையாக மூன்று பெண்கள் தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

லெப்டினன்ட் திவ்யா ஷர்மா, லெப்டினன்ட் சுபாங்கி ஸ்வரூப் மற்றும் லெப்டினன்ட் ஷிவாங்கி ஆகிய மூவரும் இந்திய கடற்படை விமானிகளாக செயல்பட தேர்வாகினர். அவர்களுக்கு கொச்சியில் உள்ள விமனப்படை பயிற்சி மையத்தில் டோர்னியர் (Dornier aircraft)விமானத்தில் விமானியாக பயிற்சி வழங்கப்பட்டது.

பாதுகாப்புத்துறையின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறும்போது, மூன்று பெண் விமானிகளும் 6 விமானிகள் கொண்ட DOFT குழுவில் பயிற்சி எடுத்ததாக கூறினார். பின்னர் அவர்கள் முழுமையாக கடற்படையின் உளவு, மீட்பு மற்றும் போர் நேரங்களில் எதிரிகளை தாக்கவும் முழுமையாக பயிற்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இந்த மூன்று பெண்களில், லெப்டினண்ட் ஷிவாங்கியே முதலில் முழுமையான தகுதியை பெற்றதாகவும், 15 நாட்களுக்கு பின்னர், திவ்யா ஷர்ம மற்றும் சுபாங்கி ஸ்வரூப் ஆகியோர் முழு தகுதியையும் பெற்று Maritime Reconnaissance Mission என்னும் MR மிஷனில் செயல்பட தயாராக இருப்பதாகக் கூறினார். இதன் மூலம் இந்திய கடற்படையில் உள்ள விமானங்களை இயக்கவும், மீட்பு, கண்காணித்தல் மற்றும் போர் விமானங்களை இயக்கவும் இருக்கும் முதல் பெண்கள் குழுவாக இவர்கள் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.