நட்புனா என்னானு தெரியுமா? – விமர்சனம்!

நட்புனா என்னானு தெரியுமா? – விமர்சனம்!

இந்த செல்போன் யுகத்தில் எல்லா விஷயங்களுமே மிக விரைவாக நடக்கின்றன.. ஆனால் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையின் பாதி ஆண்டுகளை கழித்து விட்டு இதுவரை என்ன பெற்றிருக்கிறோம் என ஆராய்ந்தால் நண்பர்கள்தான் நினைவுக்கு வருவர். ஆம்.. இந்த உலகில் அப்பா,அம்மா, காதலி, உறவினர் ஏன் கல்வி அறிவு கூட இல்லாமல் வாழமுடியும். ஆனால் நண்பர்கள் இல்லாதவர் யாருமே இருக்க முடியாது. அன்றாட நாளிதழ்களில் பார்க்கும் பொது பல் வேறு பிரபலங்கள் இந்த நிலைக்கு வர காரணமாக நண்பர்களை குறிப்பிடுபவர்கள். அதே போல சில பலர் திருட்டு, கொலை போன்ற பாதக செயல்களில் தனது நண்பர்களுடன் ஈடுபடுவதையும் தினமும் கேள்விப்படுகிறோம். ஆக நட்பு தான் நம்மில் பலரை பல சூழ்நிலையில் எக்கச்சமான வடிவங்களில் கூடவே வந்து வழி நடத்துகிறது. அப்படியான நம் வாழ்வின் பெரும்பாலான நேரங்களில் இணைந்திருக்கும் நட்பு வட்டாரங்களில் பெண் ஒருவர் குறுக்கிடாமல் இருந்திருக்க மாட்டார்.. அதையொட்டி நண்பர்களுக்குள் சறுக்கல & பிணக்கு வராமல் இருக்க சான்சே இல்லை. அப்படியான ஒரு நட்பு வட்டாரத்தின் அலப்பரைதான் ‘ நட்புனா என்னானு தெரியுமா?’ படம்.

படத்தின் கதை என்னவென்று கேட்டால் கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் மூவரும் ஒரே ஹாஸ்பிட்டலில் ஒரே நாளில் பிறந்து வளரும் போதும் இணை பிரியா நண்பர்களாகவே வலம் வருகிறார்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் போது நடந்த கோல்மாலால படிப்பினை தொடராத மூவேந்தர்கள் ஒரு தொழில் செய்து பிழைப்பை ஓட்ட ஆசைப்படுகிறார்கள்.

அதற்காக இவர்கள் வசிக்கும் ஏரியாவில் மேரேஜ் அரெஞ்ச்மெண்ட் வேலைகளை காண்ட்ரக்ட் எடுத்து செய்து தொழில் நடத்தி வசதியாக வாழும் இளவரசன் மாதிரியே ஆக முடிவு செய்து அதே திருமண ஏற்பாடு வேலைகளை காண்ட்ரக்ட் எடுத்து தொழில் செய்யத் தொடங்குகின்றனர். அந்த தொழிலும் திருப்தியாக போய் கொண்டிருக்கிறது,

இந்நிலையில் நாயகி ரம்யா நம்பீசன் எண்ட்ரியால்- இணைபிரியா நட்பூக்களாக இருக்கும் இந்த மூவர் நட்புக்குள் மோதல் போக்கு ஏற்பட்டு எகிறி, திமிறி, சிதறி விடுகிறார்கள். இறுதியில் இவர்கள் நட்பு மீண்டும் கூடியதா..? ரம்யா நம்பீசன் யாரை கரம் பிடித்தார் என்பதே நஎதெ கதை.

நாயகனாக அறிமுகமாகியிருக்கும் கவின், அவருக்கு ஈக்வலான வேடத்தில் நடித்திருக்கும் ராஜு மற்றும் அருண்ராஜா காமராஜா ஆகிய மூன்று பேருமே தங்கள் ரோல் என்ன என்று சரியாக புரிந்து ரசிக்கும்படியாக செய்திருகிறார்கள்.

ஹீரோ கவின் ஆரம்பத்தில் அடக்கி வாசிப்பவர் காதலன் ரோல் எடுத்த பின்னர் தனிக் கவனம் பெறுகிறார். கூடவே அந்த ராஜூ போதைக் கண்ணை வைத்து கொண்டு செய்யும் அது, இது மற்றும் எதுவெதுவோ செய்து ரசிக்க வைத்து விடுகிறார். குறிப்பாக , அருண்ராஜா காமராஜா ஃபிளைட் மோட் காண்பிப்பதும், காதல் ஃபீலிங் வந்ததும் வடிவேலு பாணியில் கோமாளித்தனம் செய்வதும், கோபத்தில் வீராவேச வசனங்கள் பேசுவதாலும் படத்தை ஒரு படி மேலே உயர்த்தி விடுகிறார். .

ஹீரோயின் ரம்யா நம்பீசன் ரொம்ப நல்லா அழகா வந்து போய், போய் வந்து அட்ராக்ட் செய்கிறார். .

காமெடிக்கென்று தனி கேரக்டர் இல்லை என்றாலும், எல்லா கேரக்டர்களும் கேஷூவலாக அடிக்கும் வசனங்களால் கைத்தட்டல் காதை பிளக்கிறது. தரன் இசை ஓ கே. யுவா -வின் கேமரா குளிர்ச்சி.

மொத்ததில் நட்புனா என்னானு தெரியுமா – சகல தரப்பினரையும் திருப்திப் படுத்தும் சினிமா.

மார்க் 3.25 / 5

error: Content is protected !!