சைபர் பிரிவு புதிய இணையதள முகவரி & போன் நம்பர்: மத்திய அரசு அறிமுகம்!.

சைபர் பிரிவு புதிய இணையதள முகவரி & போன் நம்பர்: மத்திய அரசு அறிமுகம்!.

ண்மைகாலமாக இணையம் வழியாக நடக்கும் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. குறிப்பாக ஏடிஎம் மிஷினில் நுாதன முறையில் கைவரிசை காட்டி கோடிகளை அள்ளிய ஹரியானா கும்பலை சென்னை சைபர்கிரைம் போலீசார் உதவியுடன் தி.நகர் காவல்துறை மேவாட்டில் வைத்து வளைத்துப் பிடித்தனர். இதுபோன்று இன்னும் ஏராளமான குற்றங்களை திரைமறைவில் சைபர் குற்றவாளிகள் நிகழ்த்தி வருகின்றனர். மக்கள் மத்தியில் என்னதான் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் புதுப்புது நூதன முறைகளில் சைபர்கிரைமை கையாள்கின்றனர். இதனால் பெருமளவில் மக்கள் சைபர்கிரைம் பேர்வழிகளிடம் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தவிக்கின்றனர்.

இதனால் நாடு முழுவதும் சைபர் கிரைம் குற்றங்களை கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு புதிய முறையை கையாண்டுள்ளது. அது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சைபர்கிரைம் குற்றங்கள் தொடர்பாக நாட்டின் எந்தப்பகுதியில் இருந்தும் புகார் அளிக்கும் வகையில் புதிய இணையதள முகவரியை மத்திய அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. மேலும் தேசிய இலவச தொலை பேசி சேவை எண்ணையும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச காவல் துறைகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

சைபர் கிரைம் குற்றங்களை தடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய இணையதள Cybercrime.gov.in என்ற முகவரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளம் மூலமாக நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளிக்கும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாடு உள்பட நாட்டில் உள்ள 28 மாநிலங்களின் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களின் காவல்துறைகள் ஒரே குடையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் புகார் அளித்தால் அவர் இருக்கும் இடத்தில் உள்ள காவல் துறைக்கு உடனடியாக இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு புகார் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் அதன் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தை பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளவர்களுக்கு அதற்கென தனியான தேசிய கட்டுப்பாட்டு அறையின் இலவச தொலைபேசி சேவை எண்ணும் (155260) கொடுக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!