August 2, 2021

செவ்வாய் கோளில் ஹெலிகாப்டர் பறக்க விட்டு சாதனைப் படைத்தது நாசா – வீடியோ!

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக பெர்சவரன்ஸ் என்ற விண்கலம் நாசாவால் அனுப்பி வைக்கப்பட்டது. 7 மாத பயணத்திற்கு பிறகு ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நாசாவில் வெற்றிகரமாக தறையிறங்கியது. இதனிடையே, பெர்சவரன்ஸ் ரோவர் தன்னோடு ஒரு சிறிய ஹெலிகாப்டரை எடுத்துச் சென்றுள்ளது. விரைவில் செவ்வாய் கோளில் ஹெலிகாப்டர் பறக்க விடும் சோதனை நடைபெறும் என நாசா தெரிவித்திருந்த நிலையில் ஹெலிகாப்டரானது இன்று செவ்வாயில் பறக்க விடப்பட்டு உள்ளது. நிலத்தில் இருந்து 3 மீட்டர் உயரத்தில் அந்த ஹெலிகாப்டரானது பறந்தது என நாசா கூறியுள்ளது.இதற்கு முன்பு வேற்றுக்கிரகம் எதிலும் விமானமோ, ஹெலிகாப்டரோ பறந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விவரித்த நாசா டீம், செவ்வாயின் வளிமண்டலம் மிகவும் மெல்லியது. பூமியில் இருப்பதில் வெறும் ஒரு சதவிகிதம்தான். அதனால் ஹெலிகாப்டர் பறப்பதற்குத் தேவையான காற்று கிடைக்காது. ஈர்ப்பு விசையில் இருந்து மேலே எழும்புவதற்கான இழுப்புவிசை செவ்வாயில் குறைவு. அது சாதகமான அம்சம். இருப்பினும் மிகக் குறைந்த எடையிலேயே ஹெலிகாப்டரை உருவாக்கி இருக்கிறார்கள். இன்ஜெனியூட்டியின் எடை வெறும் 1.8 கிலோதான். இதன் இரு சுழலும் பிளேடுகள் 1.2 மீட்டர் நீளம் கொண்டவை. நிமிடத்துக்கு 2,500 முறை சுழலும். உண்மையில் இது மிகவும் அதிகமான வேகம். செவ்வாயில் ஒலி பரவும் வேகத்தில் மூன்றில் இருபங்கு வேகத்தில் பிளேடுகளின் நுனிப்பகுதி இயங்கும். ஜெசீரோ பள்ளத்தில் நொடிக்கு 20 மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இது பூமியில் சோதனை செய்ததைவிட அதிகம். எனினும் ஹெலிகாப்டர் இதைத் தாங்கிக் கொள்ளும் என நம்பினோம். சாத்தியமாயிற்று” என்றனர்

மிக எளிதானதாகத் தோன்றினாலும் இதற்கு முன்னால் சோதனை செய்யப்படாத தொழில்நுட்பம் என்பதில் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்த நாசாவின் விஞ்ஞானிகள் “நூறு ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் நாம் பறக்கத் தொடங்கிவிட்டோம். இப்போது நாம் வேறொரு கோளில் பறந்து இருக்கிறோம். இது மாபெரும் சாதனை’ என்று பெருமிதப்படுகிறார்கள்