October 16, 2021

மக்கள் வாழ ஏற்ற சூழல் கொண்ட 7 புதிய கோள்களை கண்டறிந்தது நாசா!

சூரிய குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பூமிக்கு மிக அருகில் அதன் துணைக் கோளான சந்திரன் உள்ளது. பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும், துணைக் கோளான சந்திரனிலும் மனிதர்கள் வசிக்க முடியாது என்பதுதன் இது நாள் வரை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது எங்கே பூமியில் இருப்பது போன்ற தட்ப வெப்ப நிலை, பிராண வாயு எனப்படும் உயிர்க்காற்று, நீர் ஆகியவை இருக்கிறதோ அங்கேதான் உயிர்கள் வாழமுடியும் என்பது விஞ்ஞானிகளின் முடிவாகும்.

plant feb 23

அந்த வகையில் புதன் கோளில் காற்று மண்டலம் இல்லை. மற்ற கோளங்களை விட இங்கு வெப்பம் அதிகம். இந்தக் கோளின் அதிக பட்ச வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேட் ஆகும். பூமியின் ஈர்ப்பு விசையைப் போன்று மூன்றில் ஒரு பங்கு ஈர்ப்பு விசைதான் இங்கு உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்தக் கிரகத்தில் மனிதன் வாழ முடியாது.

வெள்ளி கோளில் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் நிலவுகிறது. இது பூமியின் வெப்பத்தைப் போல 11 மடங்கு அதிகம் ஆகும். மேலும் இங்கு உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு எனப்படும் ஆக்சிஜனும் கிடையாது. எனவே இதிலும் மனிதன் வாழ முடியாது.

சூரியனில் இருந்து 23 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, செவ்வாய் கிரகம். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இந்தக் கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது. இதனாலேயே இதற்குச் ‘செவ்வாய்’ என்ற பெயர் ஏற்பட்டது. பூமியில் உள்ள காற்றில் நூறில் ஒரு பங்கு காற்றுதான் இந்தக் கிரகத்தில் உள்ளது. அந்தக் காற்றில்கூட ஒரு சதவீத அளவே ஆக்சிஜன் இருக்கிறது. எனவே இதிலும் மனிதன் வசிக்க முடியாது.

வியாழன் கோளிலும் மனிதன் வாழ்வதற்குரிய சாத்தியக் கூறுகள் இல்லை. காரணம் இது புதன், வெள்ளி, செவ்வாய் மற்றும் பூமியைப் போன்று பாறைக் கோளாக இல்லாமல் வாயு கோளாக இருக்கிறது. இங்கு பூமியின் புவி ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகமாக உள்ளது. இங்கு சென்றால் நமது எடை இரண்டரை மடங்கு அதிகரிக்கும். நமது எடையை நாமே தாங்க முடியாத நிலை ஏற்படும்.

சனி கிரகத்தில் எப்போதும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரி சென்டிகிரேட் குளிர் உள்ளது. இங்கே வாழ்வதை மனிதன் கற்பனை செய்துகூட பார்க்க இயலாது.

யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கிரகங்களிலும் கடுங்குளிரே நிலவுகிறது.

பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் உயிர் வாழத் தேவையான தண்ணீர், காற்று, புவி ஈர்ப்பு விசை எதுவும் கிடையாது. எனவே இங்கு மனிதன் குடியேற முடியாது என்று முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமெரிக்க விண்வெளி மையமான நாசா சூர்யா குடும்பத்தில் பூமியை போன்று மக்கள் வாழ ஏற்ற சூழல் கொண்ட 7 புதிய கோள்களை கண்டுபிடித்துள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கோள்கள் மக்கள் வாழ மிகச் சிறந்த இடம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நாசாவின் இந்த அரிய கண்டிப்பிடிப்பை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சிற்பபு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த டூடுலில் டெலஸ்க்கோப் மூலம் சூர்ய குடும்பத்தில் உள்ள புதிய கோள்களை பார்ப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள், அதாவது 235 டிரில்லியன் மைல்கள் தொலைவில் புதிய சூரியக்குடும்பம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோள்களுக்கு, ‘டிராப்பிஸ்ட் 1’ என்று நாசா விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

சூரிய குடும்பத்தை தாண்டி உள்ள கோள்கள் பற்றியும், மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ள கோள்கள் குறித்தும் அறியும் நோக்கில் நாசா, நேரலை ஒன்றை ஒளிபரப்பியது. நாசா ஒளிபரப்பில் இந்த நேரலையை 6 கோடி பேருக்கும் அதிகமானோர் பார்த்தது குறிப்பிடத்தக்கது. நாசாவின் இந்த அறிவிப்பு வின்வெளி ஆய்வில் புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது.