பிரதமர் மோடி கையிருப்பு 30 ஆயிரம் மட்டுமே: மோடி சொத்து முழு விபரம்!

பிரதமர் மோடி கையிருப்பு 30 ஆயிரம் மட்டுமே: மோடி சொத்து முழு விபரம்!

பார்லிமெண்ட் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டி யிடுகிறார். பிரதமர் மோடி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக நேற்று வாரணாசியில் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்தினார். இந்த ரோட்ஷோவில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் வழிநெடுக மலர் தூவி, மோடியை வரவேற்றனர். இதை அடுத்து மோடி இன்று தனது, வேட்புமனுவை கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று தாக்கல் செய்தார்.

அவர் வேட்புமனு உடன் தாக்கல் செய்துள்ள அபிடவிட் படி, மோடியின் வருமானம் அவரது அரசு சம்பளம் மற்றும் வங்கிகளில் வைத்திருக்கும் தொகையில் இருந்து கிடைக்கும் வட்டி மட்டும்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் கடந்த 2014-ம் ஆண்டில் அவரது மொத்த வருமானம் 9.69 லட்சம் ரூபாய், 2015-ம் ஆண்டில் 8.58 லட்சம் ரூபாய், 2016-ம் ஆண்டில் 19.23 லட்சம் ரூபாய், 2017-ம் ஆண்டில் 14.59 லட்சம் ரூபாய், 2018-ம் ஆண்டில் 19.92 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அவருக்கு மொத்தம் 2.51 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இவற்றில் அசையும் சொத்துகளின் மதிப்பு 1.41 கோடி ரூபாய். அசையாச் சொத்துகளின் மதிப்பு 1.1 கோடி ரூபாய். அவரது கையிருப்பில் தற்போது இருக்கும் ரொக்கப்பணம் 38 ஆயிரத்து 750 ரூபாய்.

தனக்கு கடன்கள் ஏதுமில்லை. பிரதமர் அலுவலகம் மற்றும் வருமான வரித்துறையிடம் இருந்து 2.2 லட்சம் ரூபாய் வரவேண்டிய நிலுவைத்தொகையாக உள்ளது. மற்றபடி, தனது பெயரில் சொந்தமாக கார் அல்லது இருசக்கர வாகனம் ஏதுமில்லை என மோடியின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தன்னிடம் ரூ.38,750 மட்டுமே இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

அது மட்டுமின்றி மோடியின் கல்வித் தகுதி எம்.ஏ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இளங்கலைப் படிப்பை 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக் கழகத்தில் முடித்ததாகவும், முதுகலை படிப்பை 1983ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக் கழகத்தில் முடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இன்று காலை பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள காகாலபைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்பட்டார். முற்பகல் சுமார் 11.30 மணியளவில் வாரணாசி கலெக்டர் அலுவலகம் சென்ற அவர், தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

Related Posts

error: Content is protected !!