September 20, 2021

சின்னம்மா-வுக்கு ஜெ.. – நாஞ்சில் சம் ‘பொத்’- ஆனது ஏன் தெரியுமா?

வான்கோழி மயில் ஆகாது… கட்சி பொறுப்பை ஏற்க அவருக்கு தகுதி இல்லை என தற்போதைய அதிமுக தலைமையை மறைமுகமாக விமர்சித்தார் அக்கட்சியின் பிரபல பேச்சாளரான நாஞ்சில் சம்பத். மேலும் தமக்கு ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட இன்னோவா காரையும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டார். இதனால் அவர் அதிமுகவிலிருந்து விலகுவது உறுதியானது.

nanjil jan 7

பின்னர் சென்னைக்கு கூட வராமால் செங்கல்பட்டு பக்கத்தில் ஒரு ஹோட்டலில் தங்கி அனைத்து பத்திரிக்கை, தொலைகாட்சிகள் பேட்டியளித்து கொண்டிருந்தார்.அதில் அதிமுக தலைமை பற்றி கடும் விமர்சனங்களை முனவைத்தார். தான் அரசியலில் இருந்தே விலக போவதாகவும், இலக்கிய பணிகளை தொடரப்போவதாகவும் ஸ்டாலினையும் புகழ்ந்தார். மீண்டும் அதிமுக அழைத்தால் பேசுவேன் என்றார்.

இப்படி குழப்பு குழப்பு என்று குழப்பிய சம்பத் இறுதியில் இன்று மீண்டும் அதிமுகவின் சின்னம்மா சசிகலாவை போயஸ் தோட்ட இல்லத்தில் நேரில் சந்தித்தார். எதிர்ப்புக்குரல் எழுப்பிகொண்டிருந்த சம்பத் சசி கலாவை சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா வை சந்தித்து விட்டு வெளியே வந்த நாஞ்சில் சம்பத் தொடர்ந்து அதிமுகவில் பணியாற்ற போவதகவும் சின்ன்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும் தெரிவித்தார். சின்னமாவின் ஆணைகளை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்யபோவதாகவும் பேட்டியளித்துள்ளர்,

அவர் நிருபர்களிடம், “அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்ததில் மனநிறைவாக இருக்கிறேன். கட்சிக்காக மிக தீவிரமாக மீண்டும் களம் இறங்குகிறேன். தமிழ்நாடு முழுவதும் எட்டுத் திசைகளிலும், சுற்றிச்சுழன்று சசிகலா தலைமையை ஆதரித்து உரையாற்றுவேன். அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விரிவாக எடுத்துரைப்பேன். வருகிற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க இமாலய வெற்றி பெற பிரசாரம் செய்வேன். தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையை நிலைநாட்டும் வகையில் எனது பிரசார வியூகம் இருக்கும்.

நிருபர்- உங்களுக்கு பிரசாரத்துக்கு கொடுக்கப்பட்ட காரை வேண்டாம் என தலைமை கழகத்தில் கொடுத்தீர்களே? அதை திருப்பி தந்து விட்டார்களா?

பதில்:- இன்று பொதுச்செயலாளரை சந்தித்த போது அவர் ஏன் காரை கொடுத்துவிட்டீர்கள், அம்மா உங்களுக்காக தந்த கார் அது. நீங்கள் காரை விட்டுச் சென்றதை கேள்விப்பட்டதும் நான் , உடனே காரை உங்கள் வீட்டுக்கு கொடுத்து அனுப்ப நினைத்து இருந்தேன். இப்போது அந்த காரை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

கே:- இடையில் சில மாதங்களாக நீங்கள் பிடித்தம் இல்லாமல் ஒதுங்கி இருந்ததாக தெரிகிறதே?

ப:- ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தனித்து விடப்பட்ட மாதிரி இருந்தது. பொது வாழ்க்கை போதும் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் சசிகலா தன்னை சந்திக்க வருமாறு அழைத்தார். அதன்படி இன்று சென்று சந்தித்தேன். என்னிடம் அவர் உங்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் எப்போதும் உண்டு. நீங்கள் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடுங்கள், கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுங்கள், உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றார். அவரது ஆணையை ஏற்று மீண்டும் கட்சியில் தீவிரமாக பணியாற்றுவேன்” என்றார்

அது சரி  எப்படி அல்லது ஏன் மாறினார் சம்பத்? என அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தால். “எங்க பார்ட்டியில் இருந்து விலகி, டி எம் கே.வில் இணையப் போகிறார் என்ற தகவல் கிடைச்சதுமே, அவர்கிட்டே பேச்சுவார்த்தை நடத்தினோம். ‘ தி.மு.க.விலே ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டங்களிலேயே திருச்சி சிவாவை பேசவிடுவதில்லை. நீங்கள் அங்கு சென்றால் உங்களுக்கும் மோசமாக நெலமைதான் வரும். அ.தி.மு.க.வில் சேர்ந்த பிறகு, உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. உங்களுக்கு உடல்நலமில்லாதபோது மருத்துவச் செலவையும் கழகம் ஏற்றுக் கொண்டது. உங்கள் மகனுக்கு மருத்துவ சீட்டும் ஏற்பாடு செய்தார் அம்மா. இப்படியொரு இக்கட்டான நேரத்தில், தி.மு.க.விற்குப் போகலாமா?’ என விவரித்தோம். தொடக்கத்தில் எங்கள் பேச்சுவார்த்தைக்கு அவர் பிடி கொடுக்கவில்லை.

இதையடுத்து, மன்னார்குடி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான முன்னாள் எம்.எல்.ஏ சிவராஜ மாணிக்கம், சம்பத்திடம் பேசினார். ‘உங்கள் சூழல்களை நான் அறிவேன். இலக்கியவாதியான உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்’ என உறுதி கொடுத்தார். இனோவா காருக்கு டீசல் போடுவதற்குக்கூட வழியில்லாத காரணத்தால்தான், மிகுந்த கொதிப்பில் இருந்தார் சம்பத். கூடவே, அவருடைய மகனுக்கு மருத்துவப் படிப்பிற்குக் கட்டணம் கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்தார். ‘ இதுவெல்லாம் ஒரு பிரச்னையா? எழுதப் படிக்கத் தெரியாதவன்கூட இந்தக் கட்சியில் ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறான். இனி உங்களுக்கு எந்த சிரமமும் இருக்காது’ என மன்னார்குடி உறவு கொடுத்த தைரியம்தான், மீண்டும் கார்டனுக்குள் சம்பத்தை நுழைய வைத்தது. இனி வழக்கம்போல இனோவா காரில் பயணிப்பார் நாஞ்சில் சம்பத்” – என்று தெரிவித்தனர்.