October 21, 2021

’புதிய தலைமுறை’யின் நம்மால் முடியும்!

நம்மால் முடியும்! நமக்கான தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள முடியும்! மக்களே ஒன்றிணைந்து செயலாற்றினால் நீர், நிலம், சாலை, கல்வி உட்பட அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். மக்களே களமிறங்கி செயலாற்றினால் உலகின் பல திசைகளிலிருந்தும் உதவிக்கரங்கள் வரும். அரசும், அதிகாரிகளும் தாமாகவே உதவுவதற்கு முன்வருவார்கள்.

இந்த நேர்மறை எண்ணங்களை மக்களின் மனதில் விதைப்பது மட்டுமில்லாமல், மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி, இளைஞர்களையும், ஆர்வலர்களையும் ஈடுபடுத்தி, அரசையும் இணைத்து மக்களின் குறைகளை தீர்ப்பதுதான்  நம்மால் முடியும் நிகழ்ச்சி!

விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படும் வகையில் பாழடைந்து கிடைக்கும் நீர் நிலைகளையும், குளங்களையும் தூர்வாருகின்ற பணியில் தற்போது நம்மால் முடியும் நிகழ்ச்சிக் குழு ஈடுபட்டு வருகின்றார்கள். இதற்காக www.nammalmudiyum.in  என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளார்கள். நம்மால் முடியும் குழுவில் தங்களை இணைத்துக் கொண்டு சேவை செய்ய விரும்பும் இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் இந்த இணைய தளம் வழியாக இணையலாம். தங்கள் ஊர்களின் தேவைகளைப் பற்றியும் இந்த தளத்தில் பதிவு செய்து நம்மால் முடியும் குழுவினரின் சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

நம்மால் முடியும் குழுவினரின் சேவைகள் நிகழ்ச்சியாகத் தொகுக்கப்பட்டு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சனிக்கிழமைதோறும் மாலை 3.30 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.