December 8, 2021

`நம்ம வீட்டுப் பிள்ளை’ – விமர்சனம்!

தமிழில் பாசத்துக்கு ஒரு போதும் பஞ்சமிருக்காது. இந்த நாட்டின் மீது தொடங்கி, அம்மா, அப்பா, அண்ணன், முதலாளி மற்றும் தங்கை பாசங்களை கலந்துக் கட்டி கொடுக்காத டாப் ஹீரோக்களே கிடையாது. உதாரணம் சொல்ல வேண்டுமானால் எம்.ஜி.ஆர் இது மாதிரி தங்கை சென்டிமென்ட் படத்தில் எக்கச்சமாக நடித்துள்ளார். அதில் சிறப்பானது என் அண்ணன். நினைத்ததை முடிப்பவன். அதுவும் அவர் வாயசைப்பில் வந்த பூ முடிப்பாள் இந்த பூங்குழலி…. பாடல் இன்றைக்கும் ஹிட். சிவாஜிக்கும் நிறைய தங்கச்சி செண்டிமெண்ட் படங்களுண்டு. குறிப்பாக பாசமலர். அண்ணன் – தங்கை பாசத்தை பரிபூரணமாக இன்றைக்கும் உணர்த்தும் படமது. ரஜினிக்கு 6ல் இருந்து 60 வரை, நான் சிகப்பு மனிதன், போன்றவை பாசமான அண்ணனாக நடித்த படங்கள். இது மாதிரி ஏகப்பட்ட பேர் ஏகப்பட்ட படங்களில் நடித்தது மாதிரி சிவகார்த்திகேயன் நடித்த தங்கச்சி பாசக் கதைதான் ‘நம்ம வீட்டு பிள்ளை’.

இந்த படத்தின் கதை என்ன? யார் எப்படி நடித்திருக்கிறார்கள்? டெக்னிஷியன்கள் பங்களிப்பு எப்பூடி என்பதையெல்லாம் சொல்வதற்கு பதில் ஒரு தகவல் :

கண்டிப்பா இப்பவே தியேட்டருக்கு போய் பார்க்க தூண்டும் படமில்லை இது.

அதே சமயம் தியேட்டருக்கு போய் பார்ப்பதால் உங்களுக்கு தலைவலியோ, அஜீரண கோளாறோ அல்லது இன்ன பிற தொந்தரவுகள் எதுவும் வராது என்று உத்தரவாதம் மட்டும் உண்டு..

ஆனால் தினந்தோறும் சின்னத்திரையில் முப்பதுக்கு மேலாக குடும்பக் கதைகளை =அதிலும் சிஸ்டர் செண்டிமெண்ட் உள்ளிட்ட வகையறாக்களை மிக்ஸ் செய்த சீரியல்களைக் கொடுக்கும் சன் டிவியில் வரும் தீபாவளிக்கு இல்லை என்றாலும் பொங்கலுக்கு முதன் முறையாக இந்த நம்ம வீட்டு பிள்ளை  திரைப்படத்தை போடும் போது அக்கடா என்று பைசா செலவில்லாமல் பாருங்க.. அது போதும்..!!

நன்றி வணக்கம்!