நான் மிருகமாய் மாற – விமர்சனம்!

நான் மிருகமாய் மாற – விமர்சனம்!

ரு படத்தில் ,கத்தி, ரத்தம், கொலை என பயங்கர வன்முறை காட்சிகள். அதிகம் இடம் பெறுவதை நாம் பார்த்து இருக்கிறோம்தான், ஆனால் நான் மிருகமாய் மாற படத்தில் வன்முறைக்குள் ஒரு சின்ன கதையை சொல்ல முயன்று இருக்கிறார்கள், அதையும் எந்த ஒரு விறுவிறுப்பும், சுவாரசியமும் இல்லாமல் திரைக்கதை செல்வதால் படத்தைக் காண சகிக்கவில்லை..1

கதை என்னவென்றால் சினி ஃபீல்டில் சவுண்ட் இன்ஜினியர் சசிகுமார். அவரின் தம்பி ஒரு தொழிலதிபரை காப்பாற்றப்போய், அதனால் ரவுடிகளால் கொல்லப்படுகிறார். கொன்றவர்களை அடையாளம் கண்டாலும் அவர்களைக் காட்டிக் கொடுக்காமல் தப்பிக்க விட்டு இவரே போட்டுத் தள்ளுகிறார்.. இதை அடுத்து செத்து போன ரவுடிகளின் சீஃப் விக்ராந்த் தனது தம்பிகளின் சாவுக்கு பழிக்கு பழியாக சசிகுமாரின் குடும்பத்தை நிர்மூலம் செய்து விடுவதாக மிரட்டுகிறார். இதை அடுத்து நடக்கும் அரிவாள் வெட்டு, உருட்டுக்கட்டை கொலை, கொலை, இரும்புத் தடியால் கொலை என்பது மட்டுமே கதை..

ஏற்கெனவே ஏகப்பட்ட கடனில் சிக்கித் தவித்தப்படி ஏதோ நடிக்க மாதிரி காண்பித்து பிழைப்பு ஓஒட்டிக் கொண்டிருந்த சசிகுமாருக்கு ஏனிந்த ரத்தவெறி வந்தது என்று புரியவில்லை.. காதலையு, கோபத்தையும் ஒரே பாவனையில் காண்பிக்கும் சசிகுமாருக்கு இந்த கேரக்டர் பெரும் பின்னடைவைக் கொடுக்கும்.. வில்லன் ரோலில் வரும் விக்ராந்த் மிரட்டல் விடுத்து பேசி பேசியே ஆளை காலி செய்த செய்த பின்னரும் அவரை வைத்து ஆக்‌ஷன் காட்சி இல்லாதது சோகம்ம். சசிக்கும் விக்ராந் துக்கும் ஒரு கிளைமாக்ஸ் மோதல் ஹைலட்டாக. இருக்கும். என்ற எதிர்பார்ப்பும் புஷ்வாணமாகி விடுகிறது. ஹரிப்பிரியா, துளசி என நட்சத் திரங்கள் இருந்தாலும் நடிக்க வாய்ப்பில்லை.

வலுவிழந்த திரைக்கதை ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது. படத்தில் சற்று ஆறுதலாக அமைந்த விஷயம் “ஜிப்ரானின்” பின்னணி இசை. திரைக்கதையில் சுவாரஸ்யமில்லை என்றாலும் ஜிப்ரானுடைய இசை அதை ஓரளவுக்கு கொண்டுவர முயற்சி செய்து இருக்கிறது.

படத்தில் வன்முறை காட்சிகள் அதிகப்படியாக உள்ளதால் குழந்தைகளுடன் செல்வதை மட்டுமல்ல நேரம் போக்க இப்படத்தைப் பார்க்கக் கூட தவிர்த்து விடலாம்..

மொத்தத்தில் நான் மிருகமாய் மாற – உவ்வே

மார்க் 1.5/5

error: Content is protected !!