கடந்தாண்டில் அதிகப்படங்களுக்கு இசை அமைத்த இசையமைப்பாளர் Sam C S !

கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழ்த்திரையுலகில் அதிகப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் சாம். சி.எஸ். பின்னணி இசையில் முன்னணியில் இருக்கும் ஓர் இசை அமைப்பாளர் அவர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.

ஒரு படத்தின் கதை எவ்வளவு தரமானதாக இருந்தாலும் அந்தக் கதையும் கதைக்கேற்ற காட்சி மொழியும் ரசிகனுக்கு உணர்வோடு கலப்பதற்கு பின்னணி இசை மிக முக்கியம். சென்ற ஆண்டில் தான் இசை அமைத்த எல்லாப்படங்களுக்கும் அதைத் தவறாமல் தந்திருந்தார் சாம்.சி எஸ். கைதி படத்தில் இருட்டுப் பாதையில் படரும் பதட்டத்தை இசை வழியே மிக அற்புதமாக கடத்தி இருப்பார். இஸ்பேட் ராஜாவும், இதயராணியும் படத்தில் காதலர்களை ஏங்கவிடும் அளவிற்கு கச்சிதமான இசையை வழங்கி இருப்பார்.

மேலும் அவர் இசை அமைத்ததில் கே13, 100, அயோக்யா ஆகிய திரில்லர் படங்களுக்கும் , தேவி 2 , ஜடா போன்ற ஹாரர் படங்களுக்கும் அதன் கதையோட்டம் கொஞ்சமும் குறையாமல் தன் இசை யால் ரசிகர்களை கவனிக்க வைத்தார்! அப்படங்களின் சுவாரசியத்தை தன் இசையால் மிக அழகாக கடத்தியிருந்தார் சாம்.சி.எஸ். பின்னணி இசை போலவே அவரின் இசையில் உருவான பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

ஒட்டுமொத்தமாக அனைத்து வகையிலும் மிகச்சிறந்த இசையை வழங்கி 2019-ஆம் ஆண்டை அருமையாக கடந்திருக்கிறார். 2020-ஆம் ஆண்டிலும் அவரது வலிமையான இசைபயணம் இன்னும் அதிக மிடுக்குடன் வீரநடை போட காத்துகொண்டிருகிறது

2019-இல் அவர் கைதி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும், ஜடா, அயோக்யா, கொரில்லா, கே13, 100 , தேவி 2 ஆகிய எட்டு படங்களுக்கு இசை அமைத்து இந்த ஆண்டில் அதிகப்படங்களுக்கு இசை அமைத்தவர் என்ற பெருமையை தன் வசம் வைத்து கொண்டார்!

aanthai

Recent Posts

பி.எப்.7 வைரஸால் இந்தியர்கள் கவலைக் கொள்ள வேண்டாம்!

உலகம் முழுக்க கொரோனா தொற்றைப் பரப்பியதாகச் சொல்லப்படும் சீனாவில் தற்போது ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய…

10 hours ago

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் இதோ!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசின் 2வது முழுமையான…

12 hours ago

‘ஷூட் த குருவி’ – விமர்சனம்!

பிரபல தொழிலதிபர் வி.கே.டி.பாலனின் ஆரம்பக்கால வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு, ஒரு கேங்ஸ்டர் படமாகவும், அதே சமயம்…

18 hours ago

‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யார் & என்ன பேசினார்கள்?

ஸ்டுடியோ கிரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட…

1 day ago

அமெரிக்காவில் உள்ள உள்ள பள்ளியிலும் இலவச உணவு திட்டம்!

தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டம் என்ற திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் காமராஜர் தோற்றுவித்தார். அதன் பிறகு எம்ஜிஆர் ஆட்சியில் சத்துணவு…

1 day ago

மாமல்லபுரத்தில் உலகத்தரத்திலான கால்பந்தாட்ட அகாடமி தொடக்கம்!

புதுயுக கால் பந்தாட்ட அகாடமியான FC Madras (எஃப்சி மெட்ராஸ்), சென்னை அருகே மகாபலிபுரத்தில் (Mahabalipuram) உலகத்தரத்திலான கால் பந்தாட்ட…

1 day ago

This website uses cookies.