April 2, 2023

முரட்டு சிங்கிள்ஸ் : ரியாலிட்டி ஷோ கிராண்ட் ஃபைனல்ஸ்

ஸ்டார் விஜய் – யில் நகைச்சுவை கலந்த இளைஞர்களுக்கான ரியாலிட்டி ஷோ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி பத்து போட்டியாளர்களுடன் தொடங்கியது, அவர்களில் ஐந்து போட்டியாளர்கள் இப்போது இந்த இறுதிப் போட்டியில் நுழைகிறார்கள்.

குட்டி கோபி, வி.ஜே. விஜய், சாம் விஷால், சில்மிசம் சிவா & எனியன் ஆகிய இந்த முதல் ஐந்து போட்டியாளர்கள் இந்த இறுதி சுற்றுக்குள் பங்குபெறுகிறார்கள். இவர்கள் ஏஞ்செல்ஸ் ஆகிய இளம் தேவதைகளின் மனங்களை கவர்ந்து அவர்களின் அன்பை பெறவேண்டும் இது இவர்களுக்கு கொடுக்கப்படும் ஒரு போட்டியாகும்.

இவ்வாறாக இவர்கள் பல போட்டிகளாகிய IQ, EQ மற்றும் LQ சவால்கள் சந்திக்க வேண்டும். இதில் ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்குகளை சந்திக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் யாஷிகா ஆனந்த், அபிராமி, கேப்ரியெல்லா, ஸ்ரீநிதி & ஜாக்குலின். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் மா கா பா ஆனந்த்.

முரட்டு சிங்கிள்ஸ் பிரமாண்டமான இறுதிப் போட்டியை 09 மே 2021, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஸ்டார் விஜய்யில் காணத் தவறாதீர்கள்.