October 18, 2021

முன்னோடி – திரை விமர்சனம்!

இப்போதைய நவீனமயமாகி விட்ட  சோஷியல் மீடியாக்கள் உதவியாலும் டெக்னாலஜின் பரிணாம வளர்ச்சியான செல்போன் கேமரா உதவியாலும் இரண்டரை மணி  நேர சினிமா என்பதை ஜஸ்ட்  டூ மினிட்ஸ் நூடுல்ஸ் செய்வது மாதிரியான  சமாச்சாரம் ஆகிவிட்டது. அதிலும் யூ டியூப் மாதிரியான பிராகரஸ் ரிப்போர்ட் கார்ட்டை உடனடியாக காட்டும் போக்கு வந்த பிறகு நடிகர்கள் எல்லாம் ஸ்டெயிராட்டாக அமெரிக்க அதிபர் ஆக ஆசைப்படும் போக்கு அதிகரித்துள்லது என்றுதான் சொல்ல வேண்டும்! ஆனால் அந்த வரிசையில் வந்துள்ள அறிமுக இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார் அடடே சொல்ல வைத்திருக்கும் படம்தான் ‘ முன்னோடி.   இதுவரை யாரிடமும் அசிச்டெண்டாக பணி புரியாத  இவர்  இயக்கத்தில் ஹரீஷ், யாமினி பாஸ்கர், ‘கங்காரு’ பட நாயகன் அர்ஜுனா, ‘குற்றம் கடிதல்’ பாவல் நவநீதன், சித்தாரா, ஷிஜாய் வர்கீஸ் உட்பட பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் ‘முன்னோடி’ பலரின் கவனத்தை கவர்ந்துள்ளதாக்கும்.

ஸ்வஸ்திக் சினிவிஷன் பி.லிட் மற்றும் சோஹன் அகர்வால் எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர் தயாரித்துள்ள இப்படத்தை தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தயாரித்த எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படத்தின் கதைப்படி நடிகை சித்தாராவுக்கு இரண்டு மகன்கள்… அதில் ஒருவர் தான் மூத்த மகன் ஹரீஷ். இவர் தாதா அர்ஜுனாவிடம் வேலை செய்து வருகிறார். ஏதோ ஒரு சூழ்நிலையில் தன்னை காப்பாற்றியதால் ஹரீஷை தம்பி போல் பார்த்து வருகிறார் ஏரியா தாதா அர்ஜுனா. ஹரீஷும் அவரை அண்ணன் ரேஞ்சில் மரியாதைக் கொடுத்து, அவர் சொல்லும் வேலைகளை ஸ்கெட்ச் போட்டு செய்து வருகிறார். ஆனால் இது அர்ஜுனாவின் மச்சானுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அதிலும் என்ன ஜாதியோ என்ற எண்ணத்தில் வெறுக்கும் மச்சான் கேரக்டர் ஹரீஷைத் தீர்த்துக்கட்டவே உரிய நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், சினிமாவுக்கு தேவையான ஹீரோயினான யாமினி பாஸ்கர் மீது காதல் கொள்ளும் ஹரீஷ், அந்த காதலால் தனது தம்பியும் ,அம்மாவும் தன் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. இதனால் தாதா அர்ஜுனாவிடம் இருந்து விலகி தம்பி மற்றும் அம்மாவுடன் நெருக்கமாகிறார் ஹீரோ. இதைப் மோப்பம் கண்ட போலீஸ் அர்ஜுனாவுக்கும், ஹரிஷுக்கும் குறி வைக்க, மறுபுறம் பாவல் அர்ஜுனா மூலமாகவே ஹரிஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்.ஒரு பக்கம் போலீஸ், மறுபக்கம் அர்ஜுனா என்று பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஹரிஷ், அவற்றில் இருந்து மீண்டு தனது குடும்பத்துடன் சேர்ந்தாரா இல்லையா என்பது தான் இந்த‘முன்னோடி’திரைப்படத்தின் ஸ்டோரி. முன்னரே குறிப்பிட்டது மாதிரி இயக்குநர் யாரிடமும் பணி புரியாத குமார் ரெடி செய்த கதைதான் இது. இதன் ஸ்கிரீன் பிளேயில் ஆங்காங்கே கொஞ்சம் சறுக்கல் இருந்தாலும் முழுப் படத்தை ரசிக்கும் விதத்தில் உருவாக்கி இருக்கிறார்.

குறிப்பாக சத்யாவாக அறிமுகமாயிருக்கும் நடிகர் ஹரீஷ் கச்சிதமாக மெயின் ரோலுக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தம்பியிடம் கோபம், வளர்ப்பு (தாதா) அண்ணனிடம் விசுவாசம் ப்ளஸ் கோபம், யாமினி பாஸ்கருடன் காதல் என தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவுக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் கச்சிதமாக செய்திருக்கிறார். கிளைமாக்ஸில் அர்ஜுனா மீதான பாசத்திலேயே “ஒரு நிமிஷம்ண்ணே” என்று டைம் கேட்டுக் கொண்டே அடியெடுத்து வைக்கும் போதெல்லாம அடி வாங்குவதும்.. கடைசியில், அந்தப் பிரச்சினையை பேசியே சால்வ் செய்வதிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

கங்காரு’ -வில் முரட்டுத்தனமாக தோற்ரமளித்த அர்ஜுனா, இந்தப்படத்தில் தாதா மந்திரமூர்த்தியாக உருவெடுத்து நம்மை கவர்கிறார். கோவிலில் வைத்து தன்னை கொல்ல வந்தவர்களை அவர் சமாளிக்கும் விதம்.. அதிலும் குப்பைத் தொட்டியை வைத்து செய்யும் ஃபைட் சரியான ஹீரோயிசம்.. முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடிக்கும் மிடுக்கு அவரிடம் தென்படுகிறது. இனி அர்ஜுனாவை தேடி வாய்ப்புகள் வர சான்ஸ் உண்டு. வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவும், பிரபு சங்கரின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. அதிலும் பாடல்களில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் புதியதாக இருப்பதோடு, கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கிறது.

மொத்தத்தில் உப்புத் தின்னவன் தண்ணி குடிக்கணும் என்ற சித்தாந்தை அந்தக் கால ஃபார்முலாவான கத்தி கத்தியால்தான் கத்தியால்தான் சாவான் என்று சகல்ரும் உணரும் விதத்தில் லவ், ஆக்‌ஷன் ஆகியவற்றும் ஃபேமிலி செண்டிமெண்டையும் சமமாக கலந்துக் கட்டி கோட்டை இயக்குநர் கோலிவுட்டுக்கே முன்னோடி ஆக முயற்சித்து இருந்தாலும் முக்கால் கிணறு தாண்டி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்!