October 17, 2021

மும்பை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட ம்க்கள் நெரிசலில் சிக்கி 22 பேர் பலி- பலர் சீரியஸ்!

மும்பை எல்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் இன்று காலை 10.50 மணியளவில், நடை மேடை மேம்பாலம் இடிந்து விட்டதாக ஏற்பட்ட வதந்தியால் திடீர் நெரிசல் ஏற்பட்டது. இதில் மூச்சுத்திணறி 22 பேர் பலியானார்கள்.

இன்னிக்கு மார்னிங்கில் இருந்து மும்பையில் பெரும் மழை பெய்தது. இந்நிலையில் பலத்த மழைக்கு இடையே முமபையில் உள்ள புறநகர் ரயில்நிலையமான எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தில் காலை 10.45 மணி அளவில் டிக்கெட் வழங்கும் இடத்தில் பெரும் கூட்டம் இருந்துச்சு. அப்போது மழைக் காரணமாக ஒரே நேரத்தில் 4 ரயில்களும் ரயில் நிலையத்தை அடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரி ஒலிப்பெருக்கியில் அறிவித்தார்.

இதனால் மக்கள் ரயில்களில் எப்படியாவது ஏறிவிட வேண்டும் என்று நினைத்து நடைமேம்பாலத்தில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயன்றுள்ளனர் நடைமேம்பாலத்தில் அமைக்கப்பட்டு இருந்த தகர மேற்கூரை பிய்ந்து கீழே விழுந்தது. அந்தச் சத்தம் பயங்கரமாகக் கேட்டது. இதனால் சிலர் பாலம் இடிந்து விட்டதாகக் கருதினர். ஆகவே பாலத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினார்கள். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி சிலர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.இந்தச் சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் கெம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் சிலர் சிகிச்சைப் பலன் இன்றி இறந்தனர்.

நெரிசலில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. உயிர் இழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் பற்றிய விவரங்களை ரயில்வே போலீஸார் சேகரித்து வருகின்றனர்.