Exclusive

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி ஜியோ தலைவரானார்!

ந்தியாவின் டாப் டெலிகாம் சர்வீஸான ரிலையன்ஸ் ஜியோ இயக்குநர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா செய்துள்ளார். மேலும், ஜியோவின் தலைவராக ஆகாஷ் அம்பானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எண்ணெய் முதல் சில்லறை பொருட்கள் வரை விற்பனை செய்துவரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைத்தொடர்பு அங்கமான ஜியோ நிறுவனத்தின் குழு உறுப்பினர்கள் ஆகாஷ் அம்பானியை புதிய தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, 2014ல் ஜியோ குழுவில் இணைந்தார். ஜியோவின் இயக்குனர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி விலகினார் என்ற செய்தியுடன் போர்டு தலைவராக அவர் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஜூன் 27, 2022 அன்று நடைபெற்ற இயக்குநர்கள் குழு கூட்டத்தில், ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து 27ம் தேதி திரு முகேஷ் டி அம்பானி ராஜினாமா செய்தார் என்று ஜியோ பங்குச் சந்தைகளுக்குத் தெரிவித்துள்ளது. மேலும், “நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், ஜூன் 27, 2022 முதல் ஐந்தாண்டு காலத்திற்கு, சுயாதீன இயக்குநர்களாக , நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர்களாக, ரமீந்தர் சிங் குஜ்ரால் மற்றும் கே.வி.சௌத்ரி ஆகியோரை நியமிப்பதற்கு வாரியம் அனுமதி அளித்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஜியோவின் நிர்வாக இயக்குநராக பங்கஜ் மோகன் பவாரை நியமிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த முடிவுக்கு பங்குதாரர்களிடமிருந்து அனுமதி தேவைப்படும்.

இந்திய தொலைத்தொடர்பு துறையில் முதல் இடம் வகிக்கும் ஜியோவின் நிகர லாபம், மூன்றாம் காலாண்டில் ரூ.3,615 கோடியாக இருந்த நிலையில், 22ஆம் காலாண்டில் ரூ.4,173 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. செயல்பாட்டின் மூலம் கிடைத்த தனி வருவாய் ரூ.20,901 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் ரூ.17,358 கோடியுடன் ஒப்பிடுகையில் 20.4 சதவீதம் அதிகம் ஆகும்.

aanthai

Recent Posts

‘வரலாறு முக்கியம்’ படத்திற்கு 300 ஸ்கிரீன்ஸாமே!

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. செளத்ரி புரொடக்‌ஷனின் 'வரலாறு முக்கியம்' திரைப்படம்தான் தற்போது இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட்டிங்கில் பேசுபொருளாக உள்ளது.…

2 hours ago

டீவி சீரியல் பார்த்த 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை – வடகொரியா குரூரம்!

வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் கடந்த ஆண்டு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தார். அதன்படி தென்கொரிய சினிமாக்கள், நாடகங்கள் இசை…

3 hours ago

லவ் டுடே படமும் பெண்ணியமும்!

இன்றைய நவீன தலைமுறை இளைஞர்களுக்கான நவீன காதல் என்று விளம்பரப்படுத்தப்பட்டு விமரிசையாக கொண்டாடப்பட்ட படம் லவ் டுடே. சரி, இளைய…

5 hours ago

டெல்லி மாநகராட்சி: பாஜக வை வீழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி!

இந்திய தலைநகர் டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக செலுத்திவந்த ஆதிக்கத்தை ஆம் ஆத்மி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. பாஜகவுக்கு…

5 hours ago

அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ‘ரத்தம்’ பட டீசர்!

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' பட டீசர் பார்வையாளர்களிடையே, படம் குறித்த எதிர்பார்ப்புகளைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் நடிகர்…

1 day ago

சங்கராந்தியன்று இரட்டைப் பரிசு வழங்கும் ஸ்ருதிஹாசன்!

'உலகநாயகன்' கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின்…

1 day ago

This website uses cookies.