September 27, 2021

’பிரபஞ்ச அழகி’ பட்டத்தை பெற்றார் பிரான்ஸ் மாணவி! – வீடியோ

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகில் உள்ள பாசே பகுதியில் இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி எனப்படும் ’மிஸ் யுனிவர்ஸ்’ போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா, பிரேசில், இந்தோனேசியா உள்ளிட்ட 86 நாடுகளின் அழகிகள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து இடம் பெற்றிருந்த பெங்களூரைச் சேர்ந்த ரோஷ்மிதா ஹரிமூர்த்தி 13 பேர் கொண்ட இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். சிறந்த அழகி யார் என்பதை முடிவு செய்வதற்கான இறுதிச்சுற்றுக்கு பிரான்ஸ், ஹைத்தி, கொலம்பியா ஆகிய நாடுகளின் அழகிகள் தேர்வு பெற்றனர். இதில் பிரான்ஸ் அழகி ஐரிஸ் மிட்டனேர் ‘மிஸ் யூனிவர்ஸ்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை ஹைதி நாட்டைச் சேர்ந்த ரகுவல் பெலிசியரும், மூன்றாவது இடத்தை கொலம்பியாவின் ஆண்ட்ரியா டோவரும் பெற்றனர்.

https://www.youtube.com/watch?v=HD3hnNfvLKg

பிரபஞ்ச அழகியாக பட்டம் சூட்டப்பட்ட மிட்டனரே, பெர்சியா வம்சாவளியைச் சேர்ந்தவர். தற்போது பல் அறுவை சிகிச்சை குறித்த பட்டப்படிப்பை படித்து வருகிறார். தன்னுடைய பிரபஞ்ச அழகி பட்டத்தின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் மேற்ெகாள்ளப் போவதாகவும், குறிப்பாக பற்கள் சுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். போட்டி தினத்தை விடுமுறையாக அறிவிக்க பலர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டார்ட்டே அந்த வேண்டுகோளை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இதனிடையே நம்மில் எத்தனை பேருக்கு இந்த உலக அழகிப் போட்டி தோன்றிய வரலாறு தெரியும் என்று தெரியவில்லை சரி இன்றைய ஃப்ளாஷ்பேக் ரிப்போர்ட்டில் இந்தத் தகவலை தெரிந்து கொள்வோமே.

முதன் முதலில் மிஸ் வோர்ல்டு (Miss World event) எனப்படும் உலக அழகிப் போட்டி லண்டனில் எரிக் மோர்லீ (Eric Morley ) என்பவரால் 1951-ம் ஆண்டு ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாக தொடங்கப்பட்டது . ஆம்.. தான் வசித்தப் பகுதியில் இருக்கும் சிறு குழந்தைகள் மற்றும் பெண்களை மட்டுமே வைத்து முதன் முதலில் சில பரிசுகளை தந்து ஒரு பொழுதுப் போக்கிற்காக இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தார். காலப் போக்கில் இந்த நிகழ்ச்சி பற்றி அறிந்த ஊடகங்கள் அனைத்தும் சற்று இதை ஒரு புனைப்புடன் உலகம் முழுவதும் பரவ செய்தனர். இதனால் உலகம் முழுவதும் பலரால் இந்த நிகழ்ச்சி வெகுவாக ஆர்வத்தை ஏற்படுத்தியது ஆனாலும் அந்த காலக் கட்டத்தில் இந்த நிகழ்ச்சியை மோர்லீ (Eric Morley ) தான் விருப்பப்படும் நேரத்தில் எப்பொழுதாவது மட்டுமே நடத்தி வந்தார். அதே சமயம் ஊடகங்களின் விளம்பரத்தால் மிகக் குறுகிய காலத்தில் அனைவரையும் அதிகமாகக் கவர்ந்த போட்டிகளில் இதுவும் ஒன்றாகிப்போனது.

miss jan 30

அதன் பின்புதான் எப்பொழுதாவது நடத்தப்பட்ட இந்த உலக அழகிப் போட்டி வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் என்று மோர்லீ அறிவித்தார். அதன் பின்பும் ஒரு சாதாரணப் போட்டியாக நடத்தப்பட்டு வந்த இந்த அழகிப்போட்டி 1959ம் ஆண்டு பி பி சி (BBC) தனது விளம்பரங்களின் மூலமாக உலகம் முழுவதும் இந்த பிரபஞ்ச அழகிபோட்டியைப் பற்றி அறிய செய்தது. அதன் பின்புதான் 1960 மற்றும் 1970 ஆண்டுகளில் இந்த உலக அழகிபோட்டி (Miss World Competition) சுமார் 60 மில்லியன் ரசிகர்களுடன் உலகத்தின் டாப் ரேங் போட்டிகளில் ஒன்றாக அனைவராலும் அறியப்பட்டது

அதுமட்டுமல்ல 1980ம் ஆண்டுவரை அழகையும் உடல் தரத்தையும் மட்டுமே முதன்மையாக வைத்து நடத்தப்பட்ட இந்த உலக அழகிப் போட்டி முதன் முறையாக 1981ம் ஆண்டுதான் பொது அறிவு, விளையாட்டுத் திறமை என பல புதுமையான தகுதிகளை இந்தப் போட்டிக்குள் புகுத்தியது உலக அழகிப்போட்டி குழு. இதில் இந்தியர்களாகிய நாம் பெருமைப்படும் விஷயம் என்னவென்றால் இதுவரை நடத்தப்பட்ட மொத்த உலகப் அழகிப் போட்டிகளில் ஐந்து முறை உலக அழகி பட்டம் வென்ற முதல் மூன்று நாடுகளில் முதல் இடத்தில் இருப்பது இந்தியா என்பதுதான்.

https://www.youtube.com/watch?v=KT0mOldTHxs

அதுமட்டுமின்றி இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த அழகிகளிலும் சிறந்த அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணும் இந்தியாவை சேர்ந்த ஐஸ்வர்யா ராய் என்பது ஹைலைட்டான விஷயம். இன்று இந்த உலக அழகிகளை தேர்ந்தெடுக்கும் குழுவில் இந்தியாவின் சார்பில் ஐஸ்வர்யா ராயும் ஒரு நபராக இருக்கிறார் என்பதும் இந்தியாவிற்கு உலக அழகிப் போட்டிகளில் கிடைத்த சிறப்புகளில் ஒன்று என்று சொல்லலாம். இவ்வளவு அழகிகளை இந்த பிரபஞ்சம் அறிய செய்து உலக அழகிப் போட்டியை தலைவராக இருந்து சிறப்பித்து வந்த மோர்லீ கடந்த இரண்டாயிரத்தில் இறந்துவிட்டார். என்றாலும் அவரின் மறைவிற்குப் பிறகு அவரின் தலைவர் பொறுப்பை அவரது மனைவி ஏற்று இதுவரை சிறப்பாக இந்த உலக அழகிப்போட்டியினை நடத்தி வருகிறார்