மிஸ் இண்டியா பாட்டி போட்டி – பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியின் வீடியோ!
இந்திய அளவில் நடைபெற்ற பாட்டிகளுக்கான அழகிப் போட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டு அசத்திய பாட்டிகளின் பல்வேறு அசாத்தியங்களைக் கண்டு ஏகப்பட்ட இளசுகள் அதிசயித்து போனார்கள்.
பெங்களூர் மாநிலம் அத்திப்பள்ளி அருகே உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் முதன்முதலில் இந்தியா 2019 பாட்டிகளின் அழகுப் போட்டி நடத்தப்பட்டது
இந்த போட்டி இந்திய அளவில் நடத்தப்படுவதால் தமிழ்நாடு .கர்நாடகா ஆந்திரா .கேரளார் ஹரியானா .பஞ்சாப் டெல்லி ,மும்பை . பீகார், உள்ளிட்ட 19 மாநிலங்களிலிருந்து சுமார் 19 போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளையும் நளினமான நடையுடன் அணிவகுத்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
பாட்டிகள் அணிவகுத்து வந்தபோது அவர்களின் சொந்தங்கள் பேரக்குழந்தைகள் கைத்தட்டி உற்சாகம் மிகுதியில் கூக்குரலிட்டனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் சிறந்த சிகை அலங்கார விருது சிறந்த உடல் கட்டமைப்பு விருது சிறந்த இளமை தோற்ற விருது என பல்வேறு விருதுகளை தட்டிச் சென்றனர் பாட்டிகள் இடையே பாட்டிகளை உற்சாகப்படுத்தும் விதமாக நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இத்தனைக்கும் அவ்வப்போது மழை குறுக்கிட்டாலும் தங்களது ஒய்யார நடையில் பாரம்பரிய உடையுடன் வலம் வந்து நடுவர்களை இளம் பெண்களைப் போல் கிறங்க அடித்தனர். இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக சாண்டல்வுட் இளம் நடிகர் அர்ஜுன் தேவ் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி என ஒன்பது பேர் பங்கு பெற்றனர்
.மேலும் பாட்டிகளின் சொந்தங்களும் நிகழ்ச்சிய ஏற்பட்டாளர்களும் காணவந்த ரசிகர்களும் பாட்டிகளை உற்சாகப்படுத்தினர் இறுதியில் மூன்று போட்டியாளர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டனர் அதில் கர்நாடக மாநிலத்தை சார்ந்த ஆர்த்தி பாட்டி இந்திய பாட்டியாக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மகுடம் சூட்டப்பட்டது.
இந் நிகழ்ச்சி குறித்து இந்த போட்டியின் ஒருங்கிணைப்பாளரிடம் கேட்ட போது, ‘அழகு என்பது வெளிப்புற தோற்றம் அல்ல, அது தன்னம்பிக்கைகான தோற்றம். அதனை உணர்த்தவே இந்த போட்டி’ என்றார்.