90 கிட்ஸ் மற்றும் 2k கிட்ஸ்களுக்கான படம் DADA!

90 கிட்ஸ் மற்றும் 2k கிட்ஸ்களுக்கான படம் DADA!

பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின், நடிகை அபர்ணா தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘டாடா’. இதில் பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உட்பட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கணேஷ் கே பாபு இயக்கியுள்ள இப்படத்தை ஒலிம்பியா நிறுவனம் சார்பில் அம்பேத் குமார் தயாரித்துள்ள DADA என்று ஆங்கிலத்தில் தலைப்பிடப் பட்டிருக்கும் இதன் பொருள் குழந்தைகள் மொழியில் ‘ அப்பா’ என்பதாம். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் டாடா படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருப்பது பலரது புருவங்களை உயர வைத்திருக்கிறது.

விரைவில் ரிலீசாக இருக்கும் ‘டாடா’ படம் குறித்து ஹீரோ கவின், இயக்குநர் கணேஷ் கே.பாபு, இசையமைப்பாளர் ஜென் மார்டின் ஆகியோர் பகிர்ந்த விஷயங்கள் இதோ:

கவின் சொன்னது :

டைரக்டர் கணேஷ் கே.பாபு என் கல்லூரி நண்பர்தான். நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இக் கதையை என்னிடம் சொல்லிவிட்டார். நேரம் வரும்போது இணைந்து பயணிக்கலாம் என்று இருந்த நிலையில் ’லிப்ட்’ படம் முடிந்ததும் இதனைத் தொடங்கி விட்டோம். 90 கிட்ஸ் மற்றும் 2k கிட்ஸ்களுக்கான படம் இது என்று சொல்லலாம். மணிகண்டன் என்ற பாத்திரத்தில் நான் நடிக்கிறேன். யார் பேச்சையும் கேட்காமல், எதை செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ அதை மட்டுமே செய்யும் ஒரு இளைஞன், வாழ்க்கையில் அடிபட்டு, வாழ்க்கை அவனுக்கு எப்படி பாடத்தை கற்பிக்கிறது என்பதுதான் படத்தின் அடிநாதம்.

படம் முழுவதும் ஜாலியாகவும் இறுதியில் ஒரு மெசேஜும் வைத்து சொல்லி இருக்கிறோம். இளைஞர்களுக்கான படம் என்பதால் இது இளைஞர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய படம் என்று நினைக்கக் கூடாது. என் குடும்பத்துடன் நான் பார்த்தாலும் நெளியாமல் பார்க்கக்கூடிய சுத்தமான குடும்ப படமாக இது இருக்கும். பெரிய படங்களை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை வெளியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சி..!” என்றார்

இயக்குனர் கணேஷ் கே.பாபு சொன்னது.

“படத்திற்கு முதல் சாய்ஸே கவின்தான். இந்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்பதுடன் நன்றாக நடிப்பார் என்பதும் காரணம். தெரிந்த கதையை தெரியாத ட்ரீட்மெண்ட் வைத்து சொல்லி இருக்கிறேன் அது இளைஞர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும். கல்லூரிக்கு செல்லும் கவின் கைக்குழந்தையோடு செல்கிறார். அது ஏன் அதன் பின்னணி என்ன அதற்கு பின் என்ன என்பதெல்லாம் தான் கதை. இது இன்றைய இளைஞர்களுக்கான படமாகவும் இருக்கலாம்.

கேரள வரவான அபர்ணா தாஸ் நடித்த விதத்தை பார்த்து வியப்பாக இருந்தது. நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் படத்திற்கு மிகப்பெரிய பலம். பாக்யராஜ் சார் கவிஞன் அப்பாவாக நடிக்கிறார். நடிக்க வைத்ததன் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன்..!” என்றார்.\

இசையமைப்பாளர் ஜென் மார்டின் சொன்னது :

“நண்பர்களுடன் சேர்ந்து பல குறும்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். நண்பர்களுடன் சேர்ந்து இசை ஆல்பம் தயாரித்திருக்கிறேன். கவின் நடித்த ஒரு ஆல்பத்துக்கு இசையமைத்த போது தான் அவரது அறிமுகம் கிடைத்து இந்த பட வாய்ப்பு கிடைத்தது. இதில் யுவன் சங்கர் ராஜா சார் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அந்த பாடலை விரைவில் வெளியிட இருக்கிறோம். பாடல் வரிகளை படித்த உடனேயே அவர் பாடினால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தேன். தயாரிப்பாளர் அதை முடித்துக்கொடுத்தார். யுவன் சங்கர் ராஜா சார் என் முதல் படத்தில் பாடியிருப்பது எனக்குப் பெருமை..!” என்றார்

பிப்ரவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது ‘டாடா’.

error: Content is protected !!