December 1, 2021

தமிழ்நாடு எங்களின் புதிய சந்தை – OTT வீடியோ சேவையான Viu வின் முயற்சி!

முன்னணி OTT வீடியோ சேவையான Viu தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் ஒரு பிரபலமான அரட்டை நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. “Viu ஹலோ சகோ” என்று பெயரிடப் பட்டுள்ள அந்த நிகழ்ச்சியை திறமையான ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்குகிறார். Motion content Group உடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் கோலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்கள், பிரபலங்கள் அவர்களின் கதைகளை சொல்ல, ரசிகர்களுக்கு புது விருந்தாக அமையும். இந்த தமிழ் அரட்டை நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசனுடன் கலந்து கொள்ளும் முன்னணி நட்சத்திரங்கள், தங்கள் இரகசியங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தும் வகையில் விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள்.

ஒரு அரட்டை நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகும் ஸ்ருதிஹாசன் கூறும்போது, “பொழுது போக்கு துறையில் வேலை செய்யும் எவரும் பொதுவெளியில் பெரும்பாலும் அவர்களாகவே, வெளிப்படையாக இருக்க முடியாது. ஆனால் இந்த ‘Viu ஹலோ சகோ’வின் மூலம் பார்வையாளர் கள் பிரபலங்களின் இன்னொரு பக்கத்தை பார்க்க முடியும். அவர்களின் நேர்மையான உரையாடல் களால் அவர்களின் அழகான வாழ்க்கை பயணங்களை அறிந்து கொள்ள முடியும். Viuல் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன்.

Viu Indiaவின் தலைவரான விஷால் குமார் மகேஸ்வரி கூறுகையில், “எங்கள் பார்வையாளர் களுடன் ஒத்துப்போகும் கதைகள் மற்றும் வடிவங்களுடன் உள்ளூர் சந்தைகளில் முதலீடு செய்வது தொடர்கிறது. ‘எங்கள் அரட்டை நிகழ்ச்சி “No.1 Yaari” தெலுங்கு, கன்னட மற்றும் மராத்தி பகுதிகளில் புகழ்பெற்றது மற்றும் வெற்றிகரமானது. தமிழ்நாடு எங்களின் புதிய சந்தை, இங்கு இந்த அரட்டை நிகழ்ச்சியை தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். ஸ்ருதிஹாசன் மிகப் பொருத்த மான தேர்வு. அவர் பல்வேறு பிரபல விருந்தினர்களை உரையாடலில் ஈடுபடுத்துவதோடு, பிரபலங்களை பற்றி ரசிகர்களுக்கு இதுவரை தெரியாத இன்னொரு பக்கத்தையும் நிகழ்ச்சியிம் மூலம் கொண்டு வருகிறார்” என்றார்.

Motion content group இந்திய தலைவர் அஸ்வின் பத்மநாபன் கூறுகையில், “எங்களுடைய கண்டெண்ட் பார்ட்னர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் நன்மைக்காக நல்ல நல்ல கண்டெண்ட் களை உருவாக்க உதவுவது தான் எங்கள் நோக்கம். இந்த கண்டெண்ட் துறையில் முதலீடு செய்வதன் மூலமும், புதிய மாதிரிகள், வணிக உள்ளடக்க கட்டமைப்புகள் மற்றும் ஊடக நெட்வொர்க்குகள், தளங்கள், திறமையாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் இணைந்து செயல்படுவது ஆகியவற்றை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம்” என்றார்.

13 எபிசோட்களுடன் உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சி Viu ஆப் மற்றும் சன் டி.வியில் 2018 அக்டோபர் 28 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8.30 மணிக்கு ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகிறது.

Viu பற்றி:

Viu ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளான பஹ்ரைன், எகிப்து, ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் உட்பட 15 சந்தைகளில் 30 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கம் கொண்ட OTT வீடியோ சேவை ஆகும். வளர்ந்து வரும் பிராந்திய மொழி உள்ளடக் கத்தால், இந்நிறுவனம் அதன் நூலகத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது. காமெடி, ரொமாண்டிக் காமெடி, ட்ராமா வகை என வெவ்வேறு வகையிலான, பல்வேறு கதைகளை கொண்ட நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறது. Viu App ஆண்ட்ராய்டு கூகுள் பிளே மற்றும் ஆப் ஸ்டோரிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வகையில் கிடைக்கிறது. ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்களிலும் கிடைக்கிறது.

Vuclip பற்றி:

Vuclip இந்தியா, தென் கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆன் டிமாண்ட் சேவையை வழங்கும் ஒரு உலகளாவிய தொழில்நுட்ப மீடியா நிறுவனம். Vuclip நிறுவனம் Viu, Viu life, Vuclip Videos, Vuclip games ஆகியவற்றையும் கொண்டுள்ளது. அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் தலைமையகத்தை கொண்டுள்ள Vuclip, சிங்கப்பூர், கோலாலம்பூர், டெல்லி, மும்பை, புனே, துபாய், ஜகார்த்தா ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகிறது.

Motion Content Group, India பற்றி:

Motion Content Group என்பது உலகளாவிய உள்ளடக்க சந்தை முதலீட்டு நிறுவனம். பிராந்திய மற்றும் தேசிய அளவில் உள்ள மீடியா நிறுவனங்ககளுடன் உள்ளடக்கத்தில் இணைந்து செயல் பட்டு வருகிறது.