March 22, 2023

இந்தியாவின் சிறந்த நண்பன் + வளைகுடா மன்னன் = கோபூஸ் பின் சைட் அல் சைட்!

இன்று சண்டே என்பதால் தத்துபித்து – இன்றைய தத்துபித்துவில் வாசிக்க போவது – குருபக்தி – இந்தியாவின் சிறந்த நண்பன் வளைகுடா மன்னன் – 50 ஆண்டுகள் கோலோச்சிய ஒரே மன்னன் என்று பல முகம் கொண்ட இவரின் இந்த சாதனைக்கு அடித்தளம் இந்தியாவும் இந்தியாவின் படிப்பும் மற்றும் இவரின் தொலைநோக்கு பார்வைக்கு காரணம் என்று பல விஷயங்கள் இந்தியாவை ஒட்டியே உள்ளன. படியுங்கள் TOP 10 FACTS.

கோபூஸ் பின் சைட் அல் சைட் – 50 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட மாபெரும் ஓமான் நாட்டு மன்னன் என்று மட்டுமே நிறைய பேருக்கு தெரிந்த ஒன்றை தவிர நிறைய இருக்கிறது – அதுவும் அவரின் இந்த வெற்றிக்கு ஆரம்பமே இந்தியா தான். இந்தியா இல்லாமல் ஓமான் நட்டு முன்னேற்றம் என்பது இல்லை என்பதை அவரே பல முறை நிரூபித்திருக்கிறார்.

1. நமது கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்யும் ஒரே நாடு – ஓமான்.

2. 7 லட்சத்து 80 ஆயிரம் இந்தியர்கள் உள்ள ஓமான் தான் இந்திய வம்சாவளி அதிகமாக இருக்கும் இரண்டாவது பெரிய நாடு ஓமான்.

3. இந்தியா கப்பற்படை அங்குள்ள டுக்கும் துறைமுகத்தில் அனுமதித்த நாடு ஓமான்.

4. இவரின் தந்தை இந்தியாவில் இருந்து ஓமான் நாட்டை ஆண்டவர் .

5. இந்தியா ரூபாய் அதிகாரபூர்வமாய் பணமாக இருந்த நாடு ஓமான். இந்தியா தபால் தலை கூட இவரின் தந்தையின் புகைப்படத்தோடு தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் இருந்தது.

6. தான் தந்தையால் வீட்டு சிறையில் வைக்கப்பட்ட ஒரே மன்னன் இவர் தான்.கத்தியின்றி ரத்தமின்றி தந்தையை வென்று பதவிக்கு வந்தவரும் இவர் தான்.

7. இவர் இந்தியாவில் வந்து படிக்கும் போது இவரின் ஆசான் – சங்கர் தயாள் சர்மா – பிற்காலத்தில் இவர் இந்தியா நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று இவர் அரசு பயணமாக ஓமான் சென்ற போது இவர் விமான நிலையத்துக்கே சென்று நின்று வரவேற்ற போது இவர் கூறியது – இவரை நான் மன்னனாக வரவேற்க இல்லை – ஒரு மாணவனாய் என்று கூறி நெகிழவைத்தவர்.

8. கூலிங் கிளாஸ் கூட அரசர் அனுமதி இல்லாமல் போடக்கூடாது என்ற அவரின் தந்தையின் கெடுபிடி ஆட்சியில் இருந்து மாடர்ன் ஓமனாக்கியவர் இவர் தான்.

9. இது வரை ஒரு வெடிகுண்டோ அல்லது தீவிரவாதமா இல்லாத ஒரே நாடு ஓமான்.

10. வேறு மூன்று பள்ளி மட்டுமே கொண்ட ஓமான் நாட்டை பின்பு படிப்பதற்கு பேஸ்ட் பள்ளி ஓமானில்இருக்கிறது என்று பல வளைகுடா நாட்டின் பிள்ளைகள் மற்றும் இந்தியர்கள் படிக்கும் சிறந்த பள்ளியாக மாற்றி காட்டியவர்.

கடந்த ஐந்தாண்டாய் புற்று நோயில் பாதிக்கப்பட்ட இவரின் மரணம் இந்தியாவிற்கு பெரிய இழப்பாகும்.