December 7, 2022

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று மோடி தலைமையிலான மத்திய அரசு, பண மதிப் பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் சமர்ப்பித்து, புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளும்படி, பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இதனால், பலர் உயிரிழக்க நேரிட்டதுடன், நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தி யையும் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியது. இந்தியா ஸ்தம்பித்தது, அவர் அறிவிப்பு முடிந்த உடனே கடைகளில், மருத்துவமனைகளில் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தனர். லாரி ஓட்டுனர்கள், பயணிகள், பொருள் வாங்க பணத்துடன் சென்றுகொண்டிருந்த வணிகர்கள் செய்வது அறியாது திகைத்தனர், சுங்கச்சாவடிகளில் பழைய ரூபாய் நோட்டு வாங்க மறுத்து வரிசைகள் நீண்டன, அன்று இரவு வெளியூர் பயணம் செய்தவர்களுக்கு இது நன்றாக நினைவிருக்கும். பெரிய பணமுதலைகள் இரவோடு இரவாக நகைக்கடைக்கு பணத்துடன் சென்று 20% முதல் அதிக விலை கொடுத்து 500/1000 ரூபாயை தங்கமாக மாற்றினர், அன்று இரவு முழுவதும் நகைக்கடைகள் திறந்தே இருந்தன. நவம்பர் 7, 9 முகூர்த்த நாள் மொய் பணமாக வரும் 501, 1001 வைத்து சத்திர வாடகை, சமையல் செலவு செட்டில் செய்யலாம் என்று எண்ணியிருந்த திருமண வீட்டாருக்கு இந்த அறிவிப்பு பேரிடியாக இருந்தது. மக்கள் தங்களது சொந்த பணத்தை எடுப்பதற்காக வங்கி களின் வாசலிலும் ஏடிஎம் வாசல்களிலும் நீண்ட நெடு நேரம் காத்து கிடந்தனர். கூட்ட நெரிசலில் 100 க்கும் அதிகமானோர் உயிர் இழந்தனர். இந்த அவலங்களெல்லாம் ஆன் லைன் பதிவுகளாக மட்டுமே இருக்கும் சூழலில் மேற்படி நிகழ்வுகளை மோ(ச)டி என்ற பெயரில் அறிமுக இயக்குனர் ஜெகதீசன் இயக்கத்தில் விஜு மற்றும் பல்லவி டோரா நடிப்பில் உருவாகி உள்ளனர் .

நாயகன் தன் லட்சியம் 100 கோடி சேமிப்பு என்ற லட்சியத்துடன் தனது நண்பர்களுடன் இணைந்து தொடர்ந்து பல பேரை ‘மோசடி’ செய்து பணத்தை அபகரித்துக் கொண்டிருக்கிறார். லட்சங்கள், கோடிகள் என தொடர்ந்து மோசடி செய்து அப்பாவி மக்களிடம் இருந்து பணத்தை அபகரிக்கிறார். இதற்காக ரொம்ப மெனக்கெடாமல் சதுரங்க வேட்டை படத்தில் நடக்கும் அதே நூதன முறை மோசடியை செய்யும் கோஷ்டியை போலீஸார் கைது செய்து விடுகின்றனர்.

விசாரணையின் போது இப்படி தொடர் மோசடியில் ஈடுபட்டார் என்பதை நாயகன் விளக்குகிறார். அதற்காக இந்த மோசடிக் கதை ப்ளாஷ் பேக் செல்கிறது.தமிழக அமைச்சர் ஒருவரின் உதவியாளராக இருக்கும் நாயகன் விஜு, அவரின் அனைத்து பண பரிவர்த்தனைகளும் விஜுவே பார்த்து வருகிறார். இந்நிலையில், மோடியின் அதிரடி அரிவிப்பால வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அமைச்சர் அம்புட்டு பணத்தை மாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நூறு கோடி ரூபாய்க்கு 2000 ரூபாய்களாக மாற்ற, அந்தப்பணம் களவு போகிறது. தவறிப்போன 100 கோடியை திருப்பித்தர அமைச்சர் ஒரு மாதம் கெடு கொடுத்த பிளாஷ்பேக்கைச் சொல்கிறார் விஜு. ஹூம்ம்.. அப்புறமென்ன.. ஹீரோ விஜுவிடமிருந்த பணத்தை லவட்டியது யார் ?ஏன்? என்பதும், அடுத்து போலீஸ் எடுத்த நடவடிக்கையும்தான் கதை..

கதாநாயகன் விஜு, தமிழ் சினிமாவிற்கு ஒரு வரவுதான் என்றாலும், கொஞ்சம் நடிப்பு பயிற்சி தேவை.. நாயகி பல்லவி டோரா அழகாக வருக்கிறார். செல்கிறார். ஆர்.மணிகண்டனின் ஒளிப்பதிவும், ஷாஜகானின் இசையும் ஓகே.

இந்தியாவையே உலுக்கிய நிஜ சம்பவத்தை ஒன் லைன் கையில் எடுத்தாலும் , அதைக் கொண்டு சென்ற விதம் எரிச்சலடைய வைத்திருக்கிறது. பாலா இடங்களில் டிராமாத்தனமான நடிப்பை பலர் வெளிப்படுத்தி கடுப்பேத்தாறாங்க லார்ட்.

மொத்தத்தில் மோசடி டைட்டிலில் மட்டுமல்ல மேக்கிங்-கிலும்தான்

மார்க் 2.25/5