Categories: தமிழகம்

தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள முன்வராததால் 25,000 க்கும் மேற்பட்ட டோஸ்கள் வீணானது!

தமிழகத்தில் பல சுகாதார பணியாளர்கள் கோவிட் 19 தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள முன்வராததால் 25,000 க்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாக பொது சுகாதார இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் புதன்கிழமை வரை 1,97,114 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. ஆனால் தமிழகம் வந்தடைந்த தடுப்பு மருந்துகளில் 15 சதவீத டோஸ்கள் வீணாகியுள்ளன என்று பொது சுகாதார இயக்குனரகம் மேலும் கூறியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பல வயதான மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் தடுப்பூசி போட காத்திருப்பதால், அவர்களுக்கு மீதமாகியுள்ள தடுப்பூசிகளை உடனடியாக செலுத்த வேண்டும் என்று தமிழகத்தின் மூத்த தொற்றுநோயியல் நிபுணர்கள், வைராலஜிஸ்டுகள் மற்றும் தொற்று நோய் வல்லுநர்கள் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

‘‘கோவிட் 19 தடுப்பூசிகளை உடனடியாக பொது மக்களுக்கு போட துவங்க வேண்டும். குறிப்பாக முதியவர்கள் மற்றும் கோவிட் வைரஸால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களிலும் பல தடுப்பூசி போட முன்வராமல் போகலாம். ஆனால் விலைமதிப்பற்ற தடுப்பு மருந்தை வீணாக்குவதை விட இது சிறப்பு’’

‘‘உலகெங்கிலும் குறைந்தது 100 நாடுகள் தங்களது முதல் டோஸுக்காக இன்னும் காத்திருக்கும் நிலையில் நாம் அதை வீணாக்கக்கூடாது” என்று கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வரும் தொற்று நோய் நிபுணர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமிநாதன் தெரிவித்தார்.

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் சமீபத்தில் பதிவிட்ட டுவிட்டர் செய்தியில் எந்தவொரு தடுப்பு மருந்து டோஸும் வீணாகாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்கிறது. தடுப்பு மருந்து செலுத்த பதிவு செய்தவர்கள் வராவிட்டால், பிற பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்று அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தடுப்பூசி வழங்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

“அனைத்து தரப்பினருக்கு ஒரே நேரத்தில் தடுப்பூசி வழங்க முடியும் என்று நாங்கள் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். அவர்கள் எங்களை அனுமதித்தால் நாங்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை போட தொடங்குவோம். இது கோவிட் 19 தடுப்பு மருந்துகள் வீணாவதை குறைக்கும்” என விஜயபாஸ்கர் கூறினார்.

ஆனால் செவ்வாய்க்கிழமை நடந்த ஆன்லைன் கூட்டத்தின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்கள் தேசிய திட்டத்தின் போக்கை மாற்ற அனுமதிக்க முடியாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் தடுப்பூசிகளின் முதல் டோஸ் போடும் பணியை இன்னும் 10 நாட்களில் முடிக்குமாறு மாநில அதிகாரிகளை கேட்டுக் கொண்ட மத்திய அரசு, தடுப்பூசி போடும் திட்டத்தை முதியோர்களுக்கு விரிவாக்க மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.

aanthai

Recent Posts

தூதரகங்களுக்கு வந்த விலங்குகளின் கண்கள் பார்சல் – உக்ரைன் அதிர்ச்சி!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 10 மாதங்களை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷ்யா…

13 hours ago

டிஎஸ்பி.- விமர்சனம்

ஐந்து வருடங்களுக்கு முன்னால் -அதாவது 2017இல் நல்ல ஸ்கிரிப்டுடன் வந்த விக்ரம் வேதாவுக்கு பிறகு ஏனோதானொவென்று திரையில் தோன்றும் போக்கு…

15 hours ago

“வரலாறு முக்கியம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்புத் துளிகள்!

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு…

19 hours ago

பிராமண உயிர் அற்பமானதா என்ன ?!

முந்தாநாள் தில்லியின் ஜேஎன்யூ பல்கலைக் கழக வளாகத்தில் சில சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள் காணப்பட்டன. 'பிராமணர்களே இந்தியாவை விட்டு…

20 hours ago

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையைச் சொல்லும் “விட்னஸ்”!

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி…

24 hours ago

10 மாதங்களாக தொடரும் எரி பொருள் கொள்ளை – கார்கே குற்றச்சாட்டு!

நம் நாட்டில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்ததில் இருந்தே அன்றாடம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.…

1 day ago

This website uses cookies.