சென்னையைச் சேர்ந்த மோனிகா தேவேந்திரன் இங்கிலாந்தில் துணை மேயராக தேர்வு!.

சென்னையைச் சேர்ந்த மோனிகா தேவேந்திரன் இங்கிலாந்தில்  துணை மேயராக தேர்வு!.

ந்தியர்கள் பல்வேறு வெளிநாடுகளில் முக்கிய பதவிகளில் வகித்து வருகின்றனர். அரசியல், தொழில் நிறுவனங்களில் அவர்கள் கொடிக்கட்டி பறக்கின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் வெளிநாடுகளில் உயர் பதவிகளை அலங்கரித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டின் தலைநகரான சிங்கார சென்னையை சேர்ந்த பெண், இங்கிலாந்தில் புதிய பொறுப்புக்கு தேர்வாகி உள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள ஏம்ஸ்பரி மகாணத்தில் வசித்து வருபவர் மோனிகா தேவேந்திரன். இவர் சென்னையை பூர்வீகமாக கொண்டவர். இவர் அரசியலில் நாட்டம் கொண்டுள்ளார். இதன்மூலம் ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலில் ஏம்ஸ்பரி மேற்கு பகுதி கவுன்சிலராக இருந்தார். இந்த கவுன்சிலுக்கான துணை மேயர் தேர்தல் நடந்தது.

இதில் மோனிகா தேவேந்திரன் போட்டியிட்டார். இதையடுத்து அவர் பிற கவுன்சிலர்களின் ஆதரவுடன் ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் துணை மேயராக தேர்வாகி பதவியேற்றுள்ளார். ஏம்ஸ்பரி பகுதிகளில் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகம் இல்லை என கூறப்படும் நிலையில், மோனிகா தேவேந்திரனுக்கு இந்த பதவி கிடைத்துள்ளது.

இதுபற்றி மோனிகா தேவேந்திரன் கூறுகையில், ”எனக்கு சென்னை தான் சொந்த ஊர். லண்டன் என்பது நான் வேலை செய்த ஊர். இதனால் இரண்டு ஊர்களும் எனக்கு முக்கியம். சென்னை, லண்டன் இரண்டும் எனக்கு இரு கண்கள். தற்போது இங்கிலாந்தில் உள்ள ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் துணை மேயராக பதவியேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு தமிழர்கள் கிடையாது. முழுவதுமாக இங்கிலாந்து நாட்டினர் தான் உள்ளனர். இருப்பினும் இங்கிலாந்தின் பிற இடங்களில் வசிக்கும் தமிழர்கள், சங்கத்தினர் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.

இங்கிலாந்தில் எம்பியாக வேண்டும் என்பது எனது விருப்பம். மேலும், சொந்த ஊருக்கு வரவும் ஆவலாக இருக்கிறேன். இங்கு பணிகளை பூர்த்தி செய்துவிட்டு இந்தியா வந்து எனது வெற்றியை பகிர்ந்து கொள்வேன்” என்று கூறியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!