செல்ஃபி அல்லது ஆதார் மூலம் பண பரிவர்த்தனை!!

செல்ஃபி அல்லது ஆதார் மூலம் பண பரிவர்த்தனை!!

டிஜிட்டல் பரிவர்த்தனையாக டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு, இணைய வங்கி சேவைகள், மொபைல் வாலட்கள் என பின் நம்பர் மற்றும் பாஸ்வேர்டு அடிப்படையிலான பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக ஆதார் அடிப்படை அல்லது செல்ஃபியில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. கடைக்காரரிடம் ஆதார் எண்ணை குறிப்பிட்டு, ரேகை அல்லது செல்ஃபி எடுத்துக் கொண்டால் பணம் பரிவர்த்தனை ஆகிவிடும். இதற்கான பொதுவான மொபைல் ஆப் ஏற்படுத்தப்பட உள்ளது.

money dec 2

இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷன் பாண்டே நேற்று கூறுகையில், ‘‘ஆதார் அடிப்படையிலான பரிவர்த்தனைகள் நேற்று மட்டும் 1.31 கோடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்து நாள் ஒன்றுக்கு 40 கோடியாக்க தி்ட்டமிட்டுள்ளோம். தற்போது 10 கோடி பரிவர்த்தனைகளை இந்த அடிப்படையில் மேற்கொள்ள முடியும்’’ என்றார்.

நிதி ஆயோக் தலைமை செயல் அலுவலர் அமிதாப் காந்த் கூறுகையில், ‘‘பணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்க உதவும் வகையில், கைரேகை அல்லது கண் கருவிழியை அடையாளம் காணும் மொபைல் போன்களை உருவாக்க கேட்டுக்கொண்டுள்ளோம்’’ என்றார்.

செல்பி’ மூலம் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்யும் புதிய முயற்சியை அமெரிக்காவின் பிரபல நிதி நிறுவனமான ’மாஸ்டர் கார்டு’ மேற்கொண்டுள்ளது.

இதனிடையே அமெரிக்காவில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மோசடிகளை தவிர்க்க ‘மாஸ்டர் கார்டு’ நிறுவனம் செல்ஃபி அதாவது வாடிக்கையாளர்கள் முகத்தை ஸ்கேன் செய்து அவர்களை அடையாளம் காணும் திட்டத்திற்காக அனைத்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்களிடமும் மாஸ்டர் கார்ட் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

செல்ஃபி திட்டத்தை பற்றி மாஸ்டர் கார்டு நிறுவன பாதுகாப்பு நிபுணர் அஜய் பல்லா, “வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரகசிய எண் சில நேரங்களில் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, மோசடிகளை தவிர்க்க வாடிக்கையாளர்களின் செல்பி புகைப்படம், கைரேகை போன்றவற்றை பாஸ்வேர்ட்களுக்கு பதிலாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இச்சேவையை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில் மாஸ்டர்கார்டு செயலியை பதிவிறக்கம் செய்து செல்பி புகைப்படம் எடுத்து அனுப்பினால் போதுமானது” எனத் தெரிவித்திருந்தவர் விரைவில் இத்திட்டத்தை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!