பார்லிமெண்டுக்கு ஆப்செண்ட் ஆகும் பாஜக எம்.பி.க்களுக்கு மோடி எச்சரிக்கை!

பார்லிமெண்டுக்கு ஆப்செண்ட் ஆகும் பாஜக எம்.பி.க்களுக்கு மோடி எச்சரிக்கை!

பாரதிய ஜனதா கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தவறாமல் வரவேண்டும். இந்த பிரச்சினையை மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்ட வேண்டி உள்ளது. ஒரு பிரச்சினையை சுட்டிகாட்டினால் குழந்தைகள் கூட அதை மீண்டும் செய்வதில்லை. கட்சி எம்.பி.க்கள் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால், உரிய நேரத்தில் மாற்றங்கள் வந்து சேரும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய் (7-12-2021) அன்று பாஜக எம்பிக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அம்பேத்கார் சர்வதேச மையத்தின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி பாஜக உறுப்பினர்கள் பலர் அவைக்கு ஒழுங்காக வருவதில்லை ஒரு தவறை சுட்டிக்காட்டி குழந்தைகளிடம் வலியுறுத்தி கூறினால் அவர்கள் கூட தெரிந்து கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

இப்பொழுது நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாஜக எம்பிக்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி மாற்றிக் கொள்ளத் தவறும் எம்பிக்கள் உரிய நேரத்தில் மாற்றத்துக்கு ஆட்படுவார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பாரதிய ஜனதா கட்சி தனது எம்பிக்களின் கூட்டத்தை நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

கூட்டத்தில் பாரதிய ஜனத ஜனதா கட்சியின் தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற கூட்டங்களை தவறாது கலந்துகொள்ள வேண்டும். தங்கள் தொகுதிகளில் அவர்கள் விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் இதன் மூலம் இளைஞர்கள் பொதுமக்கள் மத்தியில் சுலபமாக அணுக முடியும் என்று பிரதமர் கூறியதாக மத்திய நாடாளுமன்ற அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

பாஜக நாடாளுமன்ற தங்கள் தொகுதியில் வருகின்ற மாவட்டங்களின் தலைவர்களையும் மண்டலின் தலைவர்களையும் நேரில் சந்தித்துப் பேசவேண்டும்.

அவர்களுடன் தேநீர் அருந்திக்கொண்டு பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் என்று பாஜக தலைவர் நட்டா தெரிவித்தார்.

வாரணாசி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரான இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி தன்னுடைய தொகுதியில் மாவட்ட பாஜக தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டு இருக்கிறார் என்றும் நட்டா குறிப்பிட்டார்.

error: Content is protected !!