சமையல் எண்ணெய்-க்கு விதிக்கப்படும் 2.5% சுங்கவரி முற்றிலும் நீக்கம்!

பெட்ரோல், டீசலை விலை உயர்வை போன்றே இந்தியாவில் சமையல் எண்ணெய்களின் விலையும் உச்சத்தை தொட்டுவருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட சமையல் எண்ணெய், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ.180ஐத் தொட்டது.பெரும்பாலான சமையல் எண்ணெய்கள் ஒரு லிட்டருக்கு ரூ. 130 முதல் ரூ.200 வரை உயர்ந்துள்ளதுஇந்த விலைவாசி உயர்வு பொதுமக்களிடையே ஆட்சியாளர்கள் மீது கடுமையான கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது சமீபத்தில் நடைபெற்று முடிந்த பல மாநில இடைத்தேர்தல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இது ஆட்சியாளர்களுக்கு கடுமையான நெருக்கடியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, தீபாவளி பரிசாக, பெட்ரோல், டீசல் விலை மீதான வரியை சற்று குறைத்த மத்தியஅரசு, இன்று இறக்குமதி செய்யப்பட்டும் சமையல் எண்ணைகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 2.5 சதவிகித செஸ் வரியை நீக்கி அறிவித்து உள்ளது. சமையல் எண்ணெய்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறி உள்ளது.

2022ம் ஆண்டு உ.பி., பஞ்சாப், ஹிமாச்சல், கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல்கள் வர உள்ளதால், எண்ணை பொருட்களின் விலை உயர்வு தேர்தலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என எண்ணிய மத்திய அரசு, தற்போது எண்ணை பொருட்களின் விலைகளை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே இறக்குமதிக்கான சுங்கவரியை படிப்படியாக குறைத்து வந்தது மட்டுமின்றி 2022ம் ஆண்டு மார்ச்மாதம் 31ம்தேதி வரை அக்ரி செஸ் வரியையும் குறைத்துள்ளது. மேலும் எண்ணெய்ப் பொருட்களின் விலையை குறைக்க எண்ணெய் வித்துகள் மற்றும் எண்ணெய் பொருட்களின் சேமிப்பு வரம்பை மாநில அரசுகளே நிர்ணயிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது இதையடுத்து பாமாயில், நிலக்கடலை, சோயாபீன், சூரியகாந்தி மற்றும் அனைத்து முக்கிய எண்ணெய்களின் விலைகள் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.

அதானி வில்மர் மற்றும் ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட முக்கிய சமையல் எண்ணெய் நிறுவனங்கள் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மொத்த விற்பனை விலையை லிட்டருக்கு 4-7 ரூபாய் வரை குறைத்துள்ளன.

தொழில்துறை அமைப்பான சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் (SEA) மற்ற நிறுவனங்களும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்திருந்தது. அதனையடுத்து, ஜெமினி எடிபிள்ஸ் & ஃபேட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ஹைதராபாத்), மோடி நேச்சுரல்ஸ் (டெல்லி), கோகுல் ரீஃபாயில்ஸ் அண்ட் சால்வென்ட் லிமிடெட் (சித்தாபூர்), விஜய் சோல்வெக்ஸ் லிமிடெட் (அல்வார்) கோகுல் அக்ரோ ரிசோர்சஸ் லிமிடெட் மற்றும் என்கே புரோட்டீன்ஸ் பிரைவேட் லிமிடெட் (அஹமத் அஹமத்) போன்ற நிறுவனங்கள் மொத்த விற்பனை விலையை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.