October 24, 2021

உலக அடிமை முறை குறித்த ஆய்வு முடிவு!

கொஞ்சம் அதிர்ச்சியூட்டும் சர்வேக்களை அவ்வப்போது சில பல நாடுகள் வெளியிடுவது வாடிக்கை விட்டது. அந்த வகையில் நம்  இந்தியாவில் 80 லட்சம் நவீன அடிமைகள் உள்ளதாக உலக அடிமை முறை குறித்த ஆய்வு தெரிவித்துள்ளது.

வாக் ஃப்ரி பவுண்டேசன் என்ற அமைப்பு உலக அடிமை முறை குறித்த தனது 2018ஆண்டிற்கான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வானது 48 நாடுகளில் மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆய்வு 54 சர்வேக்களின் மூலம் நடத்தப் பட்டுள்ளது. 71,158 தனிநபர்களிடம் நேர்காணல் கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்டாயப்படுத்தப்பட்ட உடலுழைப்பு, கடனை அளித்து அடிமையாக்குவது, கட்டாயப்படுத்தப்பட்ட திருமணம், ஆளைக் கடத்தி அடிமையாக வைத்திருப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாவது நவீன அடிமை முறை என ‘வாக் ப்ரி பவுண்டேசன்’ வரையறை செய்துள்ளது.

இந்த அறிக்கையில்தான் இந்தியாவில் 80 லட்சம் பேர் நவீன அடிமைகளாக உள்ளனா். அதாவது ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 6 பேர் நவீன அடிமைகளாக உள்ளனர். ஆய்வுக்கு எடுத்து்க் கொண்ட மொத்த 167 நாடுகளில் இந்தியா 53 வது இடத்திலுள்ளது. உலகிலேயே வடகொரியாவில்தான் 1000 பேருக்கு 105 பேர் நவீன அடிமைகளாக உள்ளனர். இந்நாடுதான் நவீன அடிமை முறையில் முதலிடத்தில் உள்ளது. அதே போன்று, ஜப்பானில் மிகக்குறைவான அளவில் 1000 பேருக்கு 0.3 பேர் அடிமைகளாக உள்ளனர். சீனத்தில் 1000 பேருக்கு 2.8 பேர் அடிமைகளாக உள்ளனர். அந்த நாடு அடிமை முறையில் உலகளவில் 111வது இடத்தில் உள்ளது இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

ஆனால் இந்த ஆய்வறிக்கையை மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மறுத்துள்ளது. ஆய்வில் வைக்கப் பட்டுள்ள அளவீட்டு முறைகள் மற்றும் ஆய்வு முறை தவறானது என்று விமர்சித்துள்ளது. கட்டாயப்படுத்தப்பட்ட உடலுழைப்பு என்ற வரையறையெல்லாம் இந்தியாவின் பொருளாதார பண்பாட்டுச்சூழலுக்கு பொருந்தாது. என்று அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள வாக் ஃப்ரி பவுண்டேசன் அமைப்பு நவீன அடிமை முறை குறித்து சட்டத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது போன்ற பொருளாதார பண்பாட்டுச்சூழல் என்ற போர்வையில் நவீன அடிமை முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.