சீனாவில் மிகவும் குறைந்து போன குழந்தைப் பிறப்புகள்! – கவலையில் ஆய்வு நிபுணர்கள்!

சீனாவில் மிகவும் குறைந்து போன குழந்தைப் பிறப்புகள்! – கவலையில் ஆய்வு நிபுணர்கள்!

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதன்மையான நாடாக உள்ள சீனாவில். சமீப காலமாக குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து அந்நாட்டின் மக்கள் தொகை ஆய்வு மைய நிபுணர்கள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவில் கடந்த 10 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்ட கடுமை யான விதிமுறை களால் 70 ஆண்டுகளில் இல்லாத அளவு முதன்முறையாக அங்கு மக்கள் தொகை குறைந்து உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2017-ம் ஆண்டு நிலவரப்படி புதிதாக 1.73 கோடி குழந்தைகள் பிறந்துள்ளன. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 20 லட்சம் குறைவாகும். அதுபோலவே பிறப்பு விகிதம் என்பது 2017-ம் ஆண்டு 1.97 விகிதமாக குறைந்துள்ளது. அதாவது பெற்றோர் இருவருக்கும் சேர்ந்து 1.97 என்ற அளவில் குழந்தைகள் பிறந்துள்ளன. இதனால் நடப்பு மக்கள் தொகையை விடவும் குறைவான விகிதத்தில் குழந்தைகள் பிறந்துள்ளளன.

இந்த சூழலை உணர்ந்து தான் கடந்த 2016-ம் ஆண்டு அங்கு 2வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. நாட்டில் முதியவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்ததாலும், பிறப்பு விகிதம் குறைந்ததாலும் அரசின் அனுமதியுடன் 2வது குழந்தை பெற அனுமதி வழங்கப்பட்டது.

இந்த அனுமதி வழங்கப்பட்டபோதிலும் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழவில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. விஸ்கான்சிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் யீ பிக்ஸியான் மற்றும் பீகிங் பல்கலைக்கழக ஆய்வாளர் சூ ஜியான் ஆகியோர் இதுகுறித்த ஆய்வுகளை செய்துள்ளனர்.

குறிப்பாக அடுத்த 10 ஆண்டுகளில் நடுத்தர வயது கொண்ட பெண்களின் எண்ணிக்கை 3.9 கோடி என்ற அளவில் குறையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து மருத்துவம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு அதிகமாக செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

இதனால் சீனாவின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், சமூக அமைப்பில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தொகை கட்டுப்பாடு விஷயத்தில் மாற்று திட்டம் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சீனாவில் தற்போதுள்ள இளம் தலைமுறையில் ஒரு தரப்பினர் குழந்தைகளை வளர்ப்பது சோர்வு தரக்கூடிய ஒரு முறையாகப் பார்ப்பதாகவும், மற்றொரு தரப்பினர் தாங்களே தங்கள் குடும்பத்தின் ஒரே வாரிசு என்பதால் பரம்பரையை உருவாக்கும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!