August 12, 2022

இந்தியாவிலும் பரவி வரும் நவீன விபச்சாரமான வெப் செக்ஸ்!

நம்மில் பலரும் பலவிதமான பழக்க வழக்கங்களுக்கு அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள் என்று சொன்னால் நம்பிதான் ஆக வேண்டும். குடி பழக்கத்திற்கு அடிமை, போதை மருந்துகளுக்கு அடிமை மற்றும் புகைப்பழக்கத்திற்கு அடிமை போன்றவையே பொதுவாக வெளியில் பேசப்படுகின்றன. ஆனால் வெளியில் பேசப்படாத இன்னும் ஏராளமான அடிமைப் பழக்கங்கள் மக்களிடம் இருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தகைய அடிமைப் பழக்கங்கள் சாதாரணமாகத் தான் இருக்கும். உதாரணமாக, ஹெட்செட் மூலம் பாட்டு கேட்பது, வீடியோ கேம் விளையாடுவது போன்ற பல. இத்தகையவை இல்லாவிட்டால் சிலருக்கு பைத்தியமே பிடித்துவிடுவது போலும், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாதவாறும் ஆகி விடும். மேலும் விரும்பியோ அல்லது விரும்பாமலோ சில அடிமைப் பழக்கங்கள் மக்களிடம் இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்க பழக்கம் ஆபாச பேச்சை கேட்பது, ஆபாச படங்களை பார்ப்பது. இப்பழக்கம் இப்போது உலகமெங்கும் அதிகரித்து உள்ள நிலையில் நம் இந்தியாவிலும் தன் நாச சக்தியை தூவி வருகிறது   என்பதுதான் வேதனை.

நம் தமிழகத்தில் முன்னரே  தலை விரித்தாடும் செல்போன் செக்ஸ் பேச்சு என்ற  விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தோ. இந்நிலையில். சர்வதேச அளவில் ஆபாசப் படத் துறையில் வெப் கேமராக்கள் வழியாக பாலியல் ரீதியாக உறவாடுவது இப்போது மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது இது போன்ற காம அலை வீச்சு இந்தியாவிலும் வளர்ந்து  விட்டது என்கிறார்கள். இந்த செக்ஸ் வெப்சைட் தற்போது 18 வயதிற்கு உள்ளான இளம் பெண்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி அந்த இளம் பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிறதாம். இதுதான் தற்போது நவீன விபச்சாரமாகும். இந்த செக்ஸ் வெப்சைட்கள், தேர்வு செய்யும் இளம் பெண்களிடம் செக்ஸியாக பேசலாம். வெப் கேமிரா மூலம் அந்த இளம் பெண்கள், எதிர் முனையில் இருப்பவர் என்ன செய்ய சொல்கிறாரோ அதனை செய்வார்கள். நிர்வாணமாக நிற்கவும், பெண்களே சுய இன்பம் அனுபவிப்பது போல நடந்து கொள்ளவும் செய்வார்கள். இது லைவ்வாக அந்த சைட்டில் காட்டப்படும். தேவைப் பட்டால் அந்த பெண்களை சில ஆண்களுடன் உல்லாசமாக இருக்க வைப்பார்கள். அதனையும் லைவ்வாக சைட்டில் காட்டுவார்கள். இதற்கு ஏழை பெண்கள் பணத்திற்காகவும், சொகுசு வாழ்க்கைக்காவும் தங்களை இழந்து வருகின்றனராம்.

இது போன்ற விஷயங்களுக்கு அங்கீகாரம் பெற்ற புகாரெஸ்ட் நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் வெளியில் நின்று கொண்டிருக்கும் இளம் பெண்கள் புகை பிடித்துக்கொண்டே அவர்களுக்குள் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருக்கிறார்கள் . அந்தக் கட்டடத்தினுள் ஸ்டுடியோ-20 இரண்டு தளங்களில், 40 அறைகளைக் கொண்டுள்ளது. அதன் சுவர்களில் பெண்களின் கவர்ச்சியான படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. கதவு மூடப்பட்டிருந்தால் உள்ளே தொழில் நடக்கிறது என்று பொருள். மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஒரு பெண் தன் சர்வதேச வாடிக்கையாளருடன் வெப் கேமரா மூலம் உறவாடிக்கொண்டிருக்கிறார். அந்த அறையில் அவர் தனியாக இருக்கும் வரை எல்லாமே சட்டபூர்வமானதுதான். இணையம் மூலம் பாலுறவு கொள்ளும் சைபர்செக்ஸ் உலகில், அந்தப் பெண்கள் “மாடல்கள்”, அந்த ஆண்கள் “உறுப்பினர்கள்.”

தன் தொழில் குறித்து “நான் ஆடை, உள்ளாடை அல்லது தோலால் செய்யப்பட்ட ஆடைகள் ஆகியவற்றை உடுத்திக்கொள்வேன்,” என்கிறார் லானா.அந்த அறையின் ஒரு மூலையில், ஒரு பெரிய கணினி திரையும், விலையுயர்ந்த கேமராவும், தொழில்முறைப் புகைப்படக் கலைஞரின் லென்சுகளும் உள்ளன. ஆபாச இணையதளம் மூலம் லானா வேலை செய்யும்போது, சில டஜன் கண்கள் அவரைக் காணலாம். ஆனால் உறுப்பினர்களில் ஒருவர் அவருடன் மட்டுமே பிரத்யேகமாக வெப் கேமில் உறவாட, லானாவைத் தனி அறைக்குப் போகச் சொன்னால் மட்டுமே அவரால் பணம் சம்பாதிக்க முடியும்.ஸ்டுடியோ-20யின் அறைக் கதவு மூடியிருந்தால் உள்ளே மாடல் வாடிக்கையாளருடன் தொடர்பில் உள்ளார் என்று பொருள். –

நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் வேலை செய்யும் லானா, மாதம் 4,000 யூரோ சம்பாதிக்கிறார். ரூமேனியர்களின் சராசரி மாத வருவாயைவிட, இது சுமார் 10 மடங்கு அதிகம். லானாவைப் பணியமர்த்தியுள்ள ஸ்டுடியோ-20 நிறுவனமும் அவர் மூலம் மாதம் 4,000 யூரோ ஈட்டுகிறது. வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, இணையத்தில் ஆபாசப் பங்களை வெளியிடும் லைவ்ஜேஸ்மின் (LiveJasmine) இணையதளம் மாதம் 8,000 யூரோ ஈட்டுகிறது.

லைவ்ஜேஸ்மின் உலகின் மிகப்பெரிய வெப்கேம் தொழில் செய்யும் இணையதளம். தினமும் 35 லட்சம் முதல் 40 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள அந்த இணையத்தளத்தில் எப்போதும் 2,000 மாடல்கள் ஆன்லைனில் இத்தொழிலில் பணியாற்றிக் கொண்டே இருப்பார்கள். 2016-ஆம் ஆண்டு மட்டும் இந்த வெப் கேம் தொழில் எப்படி இரண்டு பில்லியன் முதல் மூன்று பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியது என்பதை இப்போது எல்லோரும் புரிந்துகொள்ள முடிகிறது.

பட்டப்படிப்பு முடித்துள்ள லானா 2008-இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் தனது கட்டுமானத் துறை வேலையை இழந்தார். பொருளாதார வீழ்ச்சியால் ரூமேனியாவும் பாதிக்கப்பட்ட பின்னர், லானா இந்தத் தொழிலுக்கு வந்தார். “முதல் முறை வாடிக்கையாளர்கள் என்னிடம் பேசியதே அதிர்ச்சியாக இருந்தது” என்றும், ஆனால் எந்த உறுப்பினர் பணம் தருவார் என்பதைப் புரிந்து கொண்டதாகவும், பணம் தராதவர்களுடன் ஆன்லைனில் நேரத்தை வீணாக்கக்கூடாது என்பதைப் புரிந்துகொண்டதாகவும் கூறுகிறார்.உள்ளே என்ன நடக்கும் என்று கேட்டதற்கு, பெரும்பாலும் உரையாடல்கள் என்று கூறிய லானா, ஒரு குறைந்த நேரம் மட்டும் நிர்வாணம் மற்றும் சுய இன்பம் ஆகியவை இருக்கும் என்றும் கூறினார்.

“ஒரு பத்து நிமிடம் பாலியல் ரீதியாகப் பேசினாலும், உங்களுக்குப் பேச மற்ற விஷ யங்களும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உறுப்பினர்கள் நீண்ட நேரம் ஆன்லைனில் இருக்க மாட்டார்கள்,” என்று ஸ்டுடியோ-20 நிறுவனத்தின் தகவல் தொடர்பு மேலாளர், ஆன்ரா சிர்னோகோனு கூறுகிறார்.அதற்காக பயிற்சியாளர், உளவியல் நிபுணர், ஆங்கில மொழிப் பயிற்சியாளர் ஆகியோரை அந்நிறுவனம் பணியமர்த்தியுள்ளது.பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து வருவதால் இது முக்கியமாகிறது.

ஆங்கில ஆசிரியர் ஆண்ட்ரியா, மொழியை மட்டுமல்லாமல், உளவியல், உடல்மொழி ஆகியவை பற்றியும் கற்றுத்தருகிறார். ரூமேனியாவில் ஒன்பது கிளைகளைக் கொண்டுள்ள ஸ்டுடியோ-20 நிறுவனம், ஒரு கிளையில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக ஆண் மாடல்களையும் கொண்டுள்ளது. எல்லா மாடல்களும் ஸ்டுடியோவுக்கு வருவதில்லை. இரண்டு பல்கலைக்கழக பட்டங்களைப் பெற்றுள்ள சாண்டி பெல், உள்ளரங்க வடிவமைப்பு செய்வதுடன் இத்தொழில் மூலம், வீட்டில் இருந்தபடியே தினமும் 100 யூரோக்களை ஈட்டுகிறார்.

“பெரும்பாலானோர் அன்பையும் பிணைப்பையும் எதிர்பார்க்கிறார்கள். எனக்கு ஆண் நண்பர் இருப்பதும், அவருடன் நான் பாலியல் உறவு கொள்வதும் அவர்களுக்குத் தெரியும்,” என்கிறார் பெல்.வாடிக்கையாளருக்கு தினமும் குறுஞ்செய்தி அனுப்ப மாடல்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். – புகாரெஸ்ட் நகரில் தன் நண்பருடன் வசிக்கும் பெல் அவருக்குத் தெரிந்தே இதைச் செய்கிறார். ஆனால் அவரின் பெற்றோருக்கு இது தெரியாது. “ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள அந்த ஆண்கள் என்னை ஒன்றும் செய்ய முடியாது. அநாகரிகமாக நடந்துகொள்பவர்களின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, நிறுவனத்திடம் சொல்லி அவர்களைத் தடை செய்து விடுவேன், ” என்கிறார் பெல்.

பணம் கொழிக்கும் இத்தொழிலில் புத்தம் புது இளம் பெண்களை உள்ளே இழுக்க வெப்கேம் நிறுவனங்களும் நிறைய முயல்கின்றன. பல்கலைக்கழக வளாகங்களில் விளம்பரங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் செய்தி அனுப்புதல் என்று பல வழிகள் கையாளப்படுகின்றன. இதற்க்கான கரங்கள் நம் இந்தியா வரை நீண்டிருப்பதுதான் கவலைக்குரிய சேதி!