September 27, 2021

மொபைல் இணைய வேகத்தில் இந்தியா பின் தங்கியே இருக்கிறது!

நம் நாட்டில் அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாடு என்பது கிட்டத்தட்ட ஒரு புரட்சிபோல உருவெடுத்து உள்ளது. ஆனாலும், மொபைல் போன் சிம் கார்டு பதிவுதாரர்களில் 17.4 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் என்பது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.நடப்பு ஆண்டில் 31.3.2018ம் தேதி வரை யில், இந்தியாவில் 99 கோடி மொபைல் சந்தாதாரர்கள் இருப்பதும், அவர்களில் 17.24 கோடி பெண் சந்தாதாரர்கள் என்றும் இந்திய தொலைத்தொடர்புத்துறை ஆய்வு கூறி இருந்தது. அதே சமயம்  சர்வ தேச அளவிலான மொபைல் இணைய வேகத்தில் இந்தியா 111ஆவது இடத்தைப் பிடித்து, மிகவும் பின்தங்கியிருப்பதாக இணைய வேக ஆய்வு நிறுவனமான ஊக்லா தெரிவித்துள்ளது.

நம்மில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் சிக்னல் கோளாறு. இதனால் கால் டிராப், இண்டர்நெட் வேகம், அழைப்புகளின் போது ஆடியோ தரம் குறைவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. அடிக்கடி ஏற்படும் சிக்னல் கோளாறு நம் பணிகளை வெகுவாக பாதிக்கும். இதனிடையே மொபைல் இணைய வேகம் குறித்து நடந்த ஆய்வில், ‘சர்வதேச மொபைல் இணைய வேகத்தைக் காட்டிலும் இந்தியாவின் மொபைல் இணைய வேகம் மிகவும் குறைவாகவே உள்ளது.

இந்தியாவின் மொபைல் இணைய வேகம் 9.93 எம்.பி.பி.எஸ்-ஆக உள்ளது. ஆனால் சர்வதேச அளவிலான மொபைல் இணைய வேகம் 24.40 எம்.பி.பி.எஸ்-ஆக இருக்கிறது. இந்தியாவில் மொபைல் பதிவேற்ற வேகம் 3.82 எம்.பி.பி.எஸ்-ஆக மட்டுமே உள்ளது. ஆனால் இது சர்வதேச அளவில் 9.70 எம்.பி.பி.எஸ்-ஆக இருக்கிறது.  இணைய வேகம் அதிகரித்து வருவதிலும் இந்தியா பின்தங்கியே உள்ளது.

இந்தியாவில் 15.2 விழுக்காடு வீதத்தில் இணைய வேகம் அதிகரித்து வருகிறது. இணைய வேகம் அதிகரித்து வருவதில் இந்தியாவைக் காட்டிலும் இந்தோனேசியா முன்னிலை வகிக்கிறது. ஒட்டு மொத்தமாக மொபைல் இணைய வேகப் பட்டியலில் இந்தியா 111ஆவது இடத்தில் உள்ளது.

அதே சமயத்தில் பிராட்பேண்ட் இணைய வேகத்தில் இந்தியா 65ஆவது இடத்துக்கு முன்னேறி யுள்ளது. சர்வதேச அளவிலான சராசரி பிராட்பேண்ட் இணைய வேகம் 23 எம்.பி.பி.எஸ்-ஆக உள்ள நிலையில், இந்தியாவில் 50.4 எம்.பி.பி.எஸ்-ஆக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.