June 21, 2021

விலைபோன அதிமுக எம் எல் ஏ-க்கள்! – அம்பலப்படுத்திய டைம்ஸ் நவ்!

சசிகலா & எடப்பாடி மீதான நம்பிக்கை-க்காக கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களுக்கு பத்து கோடி அளவில் பணம் கொடுக்கப்பட்ட தாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ காட்சி அகில இந்திய அளவில் #MLAsForSale என்ற ஹேஷ்டாக் உடன் ட்ரெண்டாகி வருகிறது.அந்த வீடியோவில் (மதுரை தெற்குத் தொகுதி) எம்.எல்.ஏ. சரவணன் பேசும் போது, புறப்படறச்சே 2 கோடி தர்றதா சொன்னாய்ங்க. அப்பாலே அது 4 கோடி ஆகி பினிஷிங்கிலே கூவத்தூர் விடுதியை அடைஞ்சபோது 6 கோடி ஆகிவிட்டதாக கேஷூவலா சொன்னார்.

“என்னடா இது கூடிக்கொண்டே போறதுன்னு நினைச்சேன்.. திடீர்னு பணமாக கொடுக்க முடியாது. அதனாலே தங்கக்கட்டிகளாக வாங்கிக்கங்க -ன்னாங்க. ஹூம் பணமாகக் கொடுத்தாலும் தங்கம்தானே வாங்கப் போகிறோம்; தங்கமாகவே கிடைச்சா நல்லதுதானே -ன்னு நெனச்சு வீட்டுக்கு ஃபோன் போட்டு சொல்லிவிட்டேன்” என்றும் அதிர்ச்சி தகவல்களை அடுக்கிக் கொண்டே போனார் சரவணன்.

அதிலும் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோருக்கு ஆளுக்கு பத்து கோடி கொடுக்கப்பட்டதாகவும் மற்றவர்களுக்கு அந்த அளவுக்குப் பணம் வரவில்லை என்றும் சரவணன் அந்த வீடியாவில் வருத்தப்பட்டார்.

சரவணன் எம்எல்ஏ கூவத்தூர் விடுதியிலிருந்து தப்பிவந்து ஓ.பி.எஸ். அணியில் இணைந்தவர் என்பதால் இதுபற்றிய வாதப் பிரதிவாதங்கள்தான் ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் அனல் பறக்குது♨