எங்க மாநில மொழி தெரிந்தவரை தலைமைச் செயலாளராக்குங்க அமித்ஷாவுக்கு மிஜோராம் கோரிக்கை!

எங்க மாநில மொழி தெரிந்தவரை தலைமைச் செயலாளராக்குங்க அமித்ஷாவுக்கு மிஜோராம் கோரிக்கை!

மிஜோ மொழி தெரிந்த ஒருவரை மாநிலத் தலைமைச் செயலாளராக நியமியுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மிஜோரம் மாநில முதல்வர் ஜோரம்தங்கா கடிதம் அனுப்பி உள்ளார்.

மிஜோரம் முதல்வர் ஜோரம்தங்கா கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார் அந்த கடிதத்தில் மிஜோரம் மாநிலத்தின் தலைமைச் செயலாளராக மிசோ மொழி நன்கு தெரிந்த ஒருவரை நியமிக்க வேண்டுகிறேன். இங்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இந்தி தெரியாது ஆங்கிலமும் தெரியாது அதனால் எங்கள் மாநிலத்தின் தலைமைச் செயலாளராக மிஜோ மொழி நன்கு தெரிந்த ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் அதன் பிறகு பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்திலும் பின்பற்றப்பட்டது. அதே முறையை மத்திய உள்துறை அமைச்சர் இப்பொழுதும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மிஜோரம் தன்னுடைய கடிதத்தில் கூறியுள்ளார்.

மிஜோரம் மாநில தலைமைச் செயலாளர் பதவி காலியானதும் அம்மாநிலத்துக்கு அங்கு கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ள ஜேசி ராம் தங்கா என்பவர் இருக்கிறார் அவரை மாநில தலைமைச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்று மாநில முதல்வர் முன்னர் கோரிக்கை அனுப்பி இருந்தார். அந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டு ரேணு சர்மாவை மாநில தலைமைச் செயலாளராக நியமனம் செய்தது.

மிஜோரம் மாநில முதல்வர் தான் எழுதிய கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி உருவான நாளிலிருந்து அந்த கூட்டணியில் மிசோரம் முதல்வர் ஆகிய நான் இருந்து வருகிறேன். வேறு கூட்டணிக்கு மற்றவர்கள் சென்ற போதிலும் நான் கூட்டணியை விட்டு வெளியேறவில்லை. கூட்டணியிலேயே தொடர்ந்து இருக்கிறேன் அதற்கு உரிய சிறப்பு பரிசாக மிஜோ மொழி அறிந்த அறிந்த ஒருவரை மாநிலத் தலைமைச் செயலாளராக நியமிக்க வேண்டுகிறேன். என்னுடைய கோரிக்கை ஏற்கப்பட விட்டால் இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் என்னை கேலி செய்வார்கள் என்று மிஜோரம்தங்கா தன்னுடைய கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!